தியானம்: 38 / 40 - ஆண்டவர்
எழுதியவர்: திரு. டெ. டைட்டஸ்
தலைப்பு: ஆண்டவர் (Master)
வசன இருப்பிடம்:
யோவான் 20:28
தலைப்பின் அர்த்தம் :
நம் தமிழ் வேதாகமத்தில் ஆண்டவர் என்பதற்கு, மூல மொழியில், தலைவர் (Master) என்று அர்த்தம்.
விளக்கவுரை:
கர்த்தர் (LORD - used for YHWH) மற்றும் ஆண்டவர் (Lord - Master) என்பதற்கு இறையியல் வேறுபாடு உள்ளது. பழைய ஏற்பாட்டில் எளிதாக வார்த்தை வேறுபாட்டை அறிய முடியும். புதிய ஏற்பாட்டில் சற்று கடினமாக இருக்கும்.
விடையளிக்கும் ஆண்டவர்:
யோவான் 20:25 இன் படி தோமாவும் அவருடைய நண்பர்களும் இயேசு உயிர்த்தெழுந்ததை குறித்துப் பேசி கொண்டிருந்தனர். தோமா அவர்களிடம், கீழ்க்கண்ட ஐந்து விதமான கேள்வியை எழுப்புகிறார்.
1. இயேசுவின் கைகளில் ஆணிகளால் உண்டான காயம்
2. நான் கண்டு
3. என் விரலை விட்டு
4. என் கையை விலாவிலே போட்டு பார்த்தல் ஒழிய
5. விசுவாசிக்க மாட்டேன்
கடவுளாகிய ஆண்டவர் எளிய முறையில் தோமா முன் தோன்றி மறைவில் கேட்ட கேள்விகளுக்கு நிஜத்தில் பதில் அளிக்கிறார் (யோவான் 20:27).
அப்போது, தோமா ஆண்டவரிடம் "என் ஆண்டவரே" என்று சரணடைவது இங்கு குறிப்பிடத்தக்கது.
முடிவுரை:
தன்னுடைய கடமையை செம்மையாய் முடித்த பின்பும் ஆண்டவர் எளிமையாய்/எல்லா பாமர மக்களுக்கும் விளங்கும்படியாய் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்து தன்னுடைய ஓட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து இன்னும் நம்முடன் ஓடிக் கொண்டிருக்கிறார். முடிவாக உன் கேள்வி எதுவாயினும் பதில் ஆண்டவர் மாத்திரமே!
ஆண்டவரைப் பற்றிக் கொள்!
ஆண்டவரையே பற்றிக் கொள்!
எல்லாம் அவரே! எங்கும் அவரே!
0 Comments