Ad Code

நசரேயன் • Nazarane • SMC • Arun

SMC Lenten Meditation 2024
தியானம்: 28 / 40 - நசரேயன் 
எழுதியவர்: செல்வன். ரா. அருண் பாலசிங் 

தலைப்பு : நசரேயன்
மத்தேயு 2:23..... கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம் பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

வசன இருப்பிடம் : 
மத்தேயு 2:22,23

தலைப்பின் அர்த்தம் : 
நாசரேத்தில் வளர்ந்தவர்

விளக்கவுரை : 
ஏரோதின் மகனாகிய அர்கெலாயு தன் தகப்பனை போல கொடூரமான ஆட்சியாளராக யூதேயாவில் இருந்ததால், யோசேப்பு தேவனால் எச்சரிக்கப்பட்டு நாசரேத் என்னும் ஊரில் தங்கினான் . மனிதர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களோடு தொடர்புபடுத்தும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. இயேசு நசரேத்தில் வாழ்ந்து வந்ததால், அவரை நசரேயன் என அழைத்தனர். நாசரேத் என்பதற்கு "தளிர்-ஊர்" என அர்த்தம். இது, கீழ் கலிலேயாவில் இருந்த ஒரு ஊர். இயேசு பூமியில் இருந்தபோது இங்குதான் தன் வாழ்நாளில் பெரும்பாலான காலத்தைச் செலவழித்தார்.
 "தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது". ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய புத்தகத்தை (ஏசா 11:1) அநேகமாகக் குறிக்கலாம். வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியாவை ‘ஈசாயின் வேர்களிலிருந்து முளைக்கும் ஒரு தளிர் என்று அது குறிப்பிடுகிறது.

முடிவுரை : 
ஆம் இயேசுவின் ஆரம்பம் தளிர் போன்று காணப்படலாம் ஆனால் மனித குலத்தின் பாவங்களை சிலுவையில் வெற்றிசிறந்தார். அதுப்போல நாமும் இவுலகத்தின் பாவங்களை வெற்றி சிறப்போம்

Post a Comment

0 Comments