Ad Code

வாலிபர் ஞாயிறு . பாவ விமோசனம் • ஆசீர்வாதம் • Youth Sunday

பாவ விமோசனம்
உலகின் மீட்பர், மனம்வருந்தி திருந்துவோரின் அடைக்கலம் உண்மையாகவே தம் அருளினை நாடுவோர்க்குப் பாவ மன்னிப்பை வழங்கி வலிமையருள்வாராக, அவர் உங்களைத் தம் குமாரராக, குமாரத்திகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். உங்கள் கடந்த காலத்துக் கட்டுகளிலிருந்து உங்களை விடுவித்திருக்கிறார். அனைத்து மக்களுக்காவும் தம் இளம்வயதிலே இரத்தம் சிந்தி இறந்த கிறிஸ்து புது வாழ்வு பெற்று எழுந்துள்ளதால் அவரை நம்பும் அனைவரும் அவர் முழுமையிலும், நிறை வாழ்விலும் பங்கு பெறுகிறோம். அப்புது வாழ்வில் கடவுளின் மக்களாகக் கனிவுடனும் அன்புடனும் தாழ்மையுடனும் செயல்பட அர்ப்பணிக்கும் உங்களை கடவுள் தம் தூய ஆவியானவரால் பெலப்படுத்தி வழிநடத்துவாராக.... ஆமென்.

ஆசீர்வாதம்
அனைத்து அறிவுக்கும் அன்புக்கும் மேலான கடவுளின் நல்லுறவு உங்களோடிருந்து, நீங்கள் கடவுளையும், அவர் மகனாகிய நம் தலைவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும் அன்பிலும், தூய ஆவியாரின் பெலத்திலும் வளர்ந்து பெருகும்படி உங்களில் நிலைத்திருக்கக்கடவது.... ஆமென்

Post a Comment

0 Comments