வேதாகமத்தின்படி உலகத்திலுள்ள நாடுகள் எப்படி உருவாகின? என்பதைப் பாா்போம்.
பெருவெள்ளத்திற்குப் பிறகு உலக முழுவதும் ஒரே விதமான தட்ப வெப்பநிலை உருவானது. இதுவே மக்கள் கண்ட முதல் மழை என்பது குறிப்பிடத்தக்கது.
நோவாவின் மூன்று மகன்களான சேம் (5 குமாரர்கள்) – காம் (4 குமாரர்கள்) யாப்பேத் 7 குமாரர்கள்) – ஆதி 10: 1 -30) இவர்கள் மூலம்,
ஆதியாகமம் 9: 19 இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.
ஐரோப்பா, ஆசியா, தென் கிழக்கு ஆசியா, கானான், மத்திய கிழக்கு (இஸ்ரவேலும்) நாடுகள் உருவாகின.
நோவாவின் தீர்க்கதரிசனம்:
ஆதியாகமம் 9: 27. யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
யாப்பேத்தின் 7 குமாரர்கள்
(ஆதி 10: 2- 5) (14குடும்பங்கள்)
கோமர் – பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன், வேல்ஸ்
மாகோகு – ருமானியா, உக்ரெயின்
மாதாய் – மேதிய ஈரான் (மீதியானியர்)
யாவான் – கிரேக்கம்
தூபால் – ஜார்ஜியா
மேசேக்கு – மாஸ்கோ
தீராஸ் – மெசடோனியா & யுகஸ்லோவியா
காமின் குமாரர்கள்
(ஆதி 10: 5- 20) (30 குடும்பங்கள்)
கூஷ் – எத்தியோப்பியா
மிஸ்ராயீம் – எகிப்து
பூத் – லிபியா
கானான் – கானான் தேசம் – பெலிஸ்தியர் (ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர்)
சேமுடைய குமாரர்கள்:
(ஆதி 10: 21- 30) (26 குடும்பங்கள்)
ஏலாம் – ஈரான்
அசூர் – அசரீயா
அர்பக்சாத் – கல்தேயர் (பாபிலோனியர்) (அரபியர்)
லூத் – லிதியா
ஆராம் – சீரியா
(ஆப்ரகாம் சேமின் வம்சத்தில் வருகிறார் – நோவாவின் மூன்று சகோதரர்கள் மூலம் ( 14 + + 30 +26) 70 குடும்பங்கள் எகிப்தில் நுழைந்தார்கள்)
ஆதார வசனம்:
ஆதியாகமம் 10: 32. தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
இதுவரை உலகமெங்கும் ஓரே மொழியான எபிரேயமே இருந்தது.
0 Comments