Ad Code

மதுரநாயகம் உபதேசியார் • வரலாறு அறிவோம்

திரு.மதுரநாயகம் உபதேசியார்
(பாடலாசிரியர்) 
(29.05.1859 - 25.06.1918)

கிருபை புரிந்தெனை ஆள் பாடல்
கிறிஸ்தவ கீர்த்தனை கவிஞர்களில் "கிருபை புரிந்தெனை ஆள்" பாடல் இயற்றிய மதுரநாயகம் உபதேசியார் (திருநெல்வேலி)
அவர்கள் அக்கால ஒன்றுபட்ட மாவட்டத்தைச் சேர்ந்ததும் ஒன்றுபட்ட திருநெல்வேலி திருமண்டலத்தைச் சேர்ந்ததுமான நாசரேத்தைப்பூர்வீகமாகக் கொண்டவர்.

நாசரேத் கருப்பன் முக்கந்தர் வம்சத்தில் SPG யின் புகழ்வாய்ந்த உபதேசியார் ஆன நாசரேத் க.சுவாமியடியான் உபதேசியார் - பாக்கியத்தம்மாள் பேரனாக 
நாசரேத் க.சு.ஏசுவடியான் உபதேசியார் - லெட்சுமி என்ற பாக்கியம் தம்பதியரின் மகனாக 29.05.1859 ல் நாசரேத்தில் பிறந்தார். இவருக்கு வேதமுத்து சுவாமியடியான் என்றொரு அண்ணனும் தவமணி என்றொரு தங்கையும் இருந்தனர். இவர் ஆசிரியப்பயிற்சி பெற்று ஆசிரியரானார்.

நாசரேத்திலிருந்த மற்றொரு முக்கியக் குடும்பமான செம்மறிக்குளத்தார் குடும்பத்தைச் சேர்ந்தவரும் செம்மறிக்குளத்துநாடான் பேத்தியும் ஒய்யான்குடியிலும் பிரகாசபுரத்திலும் சிறப்புற சபைஊழியர் பணியைச் செய்த தேவசகாயம் உபதேசியார் - மரியம்மாள் நாடாச்சி தம்பதியரின் மகளுமான கிருபைவரத்தை 1884 ல் திருமணம் செய்தார். திரு.ஏ.மதுரநாயகம் - கிருபைவரம் தம்பதியருக்கு
1.M.S.அப்பாத்துரை
2.செல்வம் சாமுவேல்
3.S.M.சாலமோன்
4.நேசமணி சத்தியநாதன்
5.M.S.பாலசுந்தரம்
6.M.D.டேனியல் என 6 பிள்ளைகள்.

 இவரது பூர்வீக பண்ணையவீடு நாசரேத் தூய.யோவான் பேராலயத்தையொட்டி இருந்தது. அந்த இடத்தை மதுரநாயகம் உபதேசியாரின் மகன் S.M.சாலமோன் நாசரேத் தேவாலயத்திற்கு அன்பளிப்பாக உயில் எழுதி கொடுத்திருந்தார்கள் அந்த இடம், அதையொட்டியிருந்த மதுரநாயகம் உபதேசியாரின் சித்தப்பா வேதமாணிக்கம் அவர்களது குடும்பஇடம், (வேதமாணிக்கம் அவர்களது பேரன் ஜார்ஜ் மனோன்மணி அவர்களிடமிருந்து வாங்கப்பட்ட இடம்) மற்றும் ஆலயபொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை ஆகிய மூன்றையும் உள்ளடக்கி தற்போது தூய.யோவான் சபாமண்டபம் கட்டப்பட்டுள்ளது இக்கட்டிடத்திற்காக மதுரநாயகம் உபதேசியாரின் மகன் ராவ்சாகிப்.சாலமோன் தம் சொத்தில் 1/5 பாகத்தையும் எழுதிவைத்திருந்தார்.

மதுரநாயகம் உபதேசியார் மூக்குப்பீறியிலும் பிள்ளையன்மனையிலும் நீண்ட ஆண்டுகள் சபைஊழியராக சிறப்புற பணி செய்தார் இவரால் இயற்றப்பட்டு இப்பாடல்முதலில் நெல்லை திருமண்டலத்தில் பாடப்பட்டது பின் தமிழகமெங்கும் பரவியது.

Acknowledgement 
 ஜா.ஜான்ஞானராஜ்

Post a Comment

0 Comments