வேத பகுதி : 2 சாமு 11, சங்கீதம் 51
வேதாகம நபர் குறிப்பு :
தாவீது இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ராஜாவாக இருந்தவர். சவுல் ராஜாவாக இருந்தபோதே தாவீது தீர்க்கதரிசி சாமுவேலால் இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டவர். மேலும் அவர் ஒரு மேய்ப்பன், யுத்தவீரன், சங்கீதக்காரன் மற்றும் கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவர்.
விளக்கவுரை :
தாவீது கர்த்தரின் பார்வைக்கு பிரியமாய் நடந்து கொண்ட போதிலும் ஒரு நாள் உரியாவின் மனைவியாகிய பத்சேபாளிடம் தவறாக நடந்து கொண்டார். அது மாத்திரம் அல்ல அவளுடைய கணவனாகிய உரியாவை போரில் முன் நிறுத்தி கொலை செய்கிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அருவருப்பாய் காணப்பட்டது.
உடனே கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியாகிய நாத்தானை தாவீதினிடத்தில் அனுப்பி அவன் பாவத்தை அவனுக்கு உணர்த்துகிறார்.அப்போது தாவீது தன்னுடைய பாவம் உணர்த்தப்பட்டவராக தேவனிடம் அறிக்கை செய்து ஜெபம் செய்கிறார். அதைத் தான் நாம் சங்கீதம் இல் பார்க்கிறோம்.
தாவீது மிக பெரிய ராஜாவை இருந்த போதிலும் தான் செய்த பாவத்தை உணர்ந்து தன்னை ஒப்புக்கொடுத்து தேவனிடம் இரக்கம் வேண்டி ஜெபம் செய்கிறார்.
கற்றுக்கொள்ளும் பாடம் :
இந்த உலகத்தில் நாம் பாவம் இல்லாமல் வாழ்வது கடினம். வேதாகமத்தில் உள்ள அநேக தலைவர்கள் பாவம் செய்ததை நாம் பார்க்கிறோம். ஆனால் அதன் பிறகு அவர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து அதை கர்த்தர் சமூகத்தில் அறிக்கை செய்துவிட்டனர். பின்னர் அந்த பாவங்களை அவர்கள் மீண்டும் செய்யவில்லை.
நாமும் பாவம் செய்யும் பொது அநேக நேரங்களில் தேவனால் உணர்த்த படுகிறோம். அப்போது நாம் உணர்வு அடைந்து அந்த பாவங்களை அறிக்கை செய்து விட்டு விடுகிறோமா அல்லது அதே பாவத்தை மீண்டும் மீண்டும் செய்து அடிமைப்பட்டிருக்கிறோமா என்று சிந்தித்து பாப்போம். ஆமென்.
எழுதியவர்
திரு. ஜோ அகஸ்டின்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments