தலைப்பு: நெகேமியா: காரியம் வாய்க்க ஜெபம்
வேத பகுதி: நெகேமியா 1:4-11
வேதாகம நபர் குறிப்பு:
பெயர் காரணம் : கர்த்தர் ஆறுதல் படுத்தினார்(Yahweh has comforted)
வேலை ஸ்தலம்: சூசான் அரமனை
பொறுப்பு: அர்தசஷ்டா ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாயிருந்தான். எருசலேமின் அலங்கம் இடிப்பட்டு இருப்பத்தை அறிந்து அதனை கட்டி எழுப்ப ராஜாவிடம் உத்தரவு பெற்று, கர்த்தரின் ஒத்தாசையோடு 52 நாளில் கட்டி முடித்தான்.
விளக்கவுரை:
நெகேமியா யூதாவிலிருந்து வந்த தன் சகோதரர் மூலமாய் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் நிலையையும் எருசலேமின் அலங்கம் இடிப்பட்டதையும் அறிந்துகொள்கிறான்.
ஏதோ ஒரு செய்தியை கேட்டு கடந்துபோவது போல் போகாமல் தன் ஜனங்களின் பாடுகளை உணர்ந்து ஜெபிக்கிறான். கீழ்ப்படியாமை “பாவம்” அந்த பாவமே இந்தநிலைக்கு காரணம் என்பதை அறிந்தவனாய் “நாங்கள் பாவம் செய்தோம்” என்று தேவனிடம் அறிக்கையிடுகிறான்.
கர்த்தரிடம் திரும்பினால் கடையாந்திரத்தில் இருந்தாலும் கூட்டிச்சேர்ப்பார் என்ற தேவனுடைய கிரியையினை அறிந்தவனாய் விசுவாசத்தோடு ஜெபிக்கிறான். இடிந்த மதிலை கட்டி எழுப்ப கர்த்தர் நெகேமியாவையே எழுப்பினார்.
நெகேமியாவுக்கு காரியத்தை வாய்க்கும்படி கர்த்தர் கிருபை அருளினார். அதற்கு அவனிடம் காணப்பட்டவை, முதலாவது தன் ஜனத்தின் மீது கரிசனை, பாவத்தை குறித்ததான விழிப்புணர்வு, தேவனிடத்தில் திரும்பினால் சீர்ப்படுத்துவார்(God’s restoration ability) என்ற சரியான விசுவாசம்.
கற்றுக்கொள்ளும் பாடம்
எந்த நிலையில் இருந்தாலும் எத்தனை முறை தோல்வி கண்டாலும் கர்த்தரிடத்தில் செய்த பாவத்தை உணர்ந்து திரும்பினால் காரியத்தை வாய்க்கப்பண்ண நம் கர்த்தர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.
எழுதியவர்
திரு. ஜோ அகஸ்டின்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments