தலைப்பு: யோபு: சிநேகிதருக்கான ஜெபம்
வேத பகுதி: யோபு 42:10
வேதாகம நபர் குறிப்பு:
ஊத்ஸ் நாட்டை சேர்ந்த யோபு மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார். அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று
புதல்வியரும் இருந்தனர்.
அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்க் காளைகளும், ஐந்நூறு பெண் கழுதைகளும் இருந்தன. பணியாள்களும் மிகப் பலர் இருந்தனர்.(யோபு 1:1-3)
விளக்கவுரை
யோபுவின் சம்பவத்தின் இறுதிக்கட்டத்தில், ஆறுதலுக்காக வந்த மூன்று நண்பர்களும் யோபுவை எவ்வளவாக விமர்சித்தனர்; யோபு ஏதோ பாவம் செய்துவிட்டதாக அடித்துக் கூறினர். யோபுவோ, மறுத்தார். இந்த சூழலிலும் கர்த்தர் வழிநடத்தியபடியே, யோபு தன் சிநேகிதருக்காக ஜெபித்தார். நடந்தது என்ன? கர்த்தர் யோபின் சிறையிருப்பை மாற்றினார்.
இங்கே, தன் வேதனையைப் புரிந்துகொள்ளாமல் தன்னை விமர்சித்து துக்கத்தை அதிகரித்த சிநேகிதருக்காக யோபு ஜெபித்தது எப்படி? நமக்கு எதிராகச் செயற்பட்டவர்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபிப்பது மிகக்கடினமான காரியமே. ஆக, பிறருக்காக ஜெபிப்பது மாத்திரமல்ல, நம்மை வேதனைப்படுத்தி துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டிய அவசியத்தை நாம் இங்கே கற்றுக்கொள்கிறோம்.
(யோபு 42. 10) யோபு அவனது நண்பர்களுக்காக ஜெபம் செய்தான். தேவன் யோபுவை மீண்டும் வெற்றிபெறச் செய்தார். கர்த்தர் யோபுவுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக எல்லாவற்றையும் கொடுத்தார்.
கற்றுக்கொள்ளும் பாடம்:
தன்னை விமர்சித்து வேதனைப்படுத்தியவர்களை "கடைசிவரை நண்பர்களாக பாவித்து ஜெபித்த யோபு" நமக்கு நல்ல முன்மாதிரி. இயேசுவும், “உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்தேயு 5:44) என்று கற்றுத்தந்தாரே.
எழுதியவர்
திரு. அந்தோணி ஞானராஜ்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments