தலைப்பு: சீலா: சிறைச்சாலை ஜெபம
வேத பகுதி : அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25
வேதாகம நபர் குறிப்பு : சீலா அப்போஸ்தலனாகிய பவுலின் மிகவும் நம்பகமான கூட்டாளிகளில் ஒருவராக இருந்தார். எருசலேம் திருச்சபையின் அதிகாரப்பூர்வ தலைவர்களில் சீலாவும் ஒருவர். பவுல் தனது ஊழியத்தில் கூட்டாளியாக சீலாவை குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார் என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது.
விளக்கவுரை:
நம்முடைய வாழ்க்கையின் பல தருணகளில் நம்மை சுற்றி இருபவர்களிடம் இருக்கின்ற தீய குணாதிசயங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டு இருக்கிறோம்.அதற்கு காரணம் எங்கே நாம் அவர்கள் தவறை உணர்த்தினால் நம் உறவானது முறிந்துவிடுமோ என்கின்ற பயத்தின் நிமித்தமாக அவ்வாறு இருக்கிறோம்.ஆனால் அப்போஸ்தலர் 16:17,18 பார்க்கும் பொழுது பவுல் குறி சொல்லும் ஆவி பிடித்த பெண்ணை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்து கொண்டபோது ஆவி அப்பெண்ணை விட்டு நீங்கிற்று. இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை கூட பொருப்படுத்தாமல் பவுலும் சீலாவும் இவ்வாறு செய்தனர்.
அப்போஸ்தலர் : 16:26,27,28 தேவனை துதித்து பாடியதின் நிமித்தமாக சிறைச்சாலையின் கதவுகள் திறக்கபட்டாலும் கட்டுகள் கழன்றுபோனாலும் தாம் இருவரும் தப்பிக்க எல்லா விதமான சூழ்நிலைகள் இருந்தாலும் சிறைச்சாலைக்காரனை கருத்தில் கொண்டு சிறையை விட்டு பவுலும் சீலாவும் வெளியே தப்பிச் செல்லாமல் சுயநலமின்றி உள்ளேயே இருந்தனர்.
அப்போஸ்தலர் 16 : 30 முதல் 34 பவுல் சீலாவின் இச்செயல்கள் ஆண்டவரை பற்றி அறியாத சிறைச்சாலைக்காரன் மற்றும் அவனது குடும்பத்திற்கு தேவனை பற்றி அறிவித்து அவர்களை இரட்சிபிற்குள்ளாக வழிநடத்த பெரும் உதவியாக இருந்தது.தாம் துன்ப சூழ்நிலையில் இருக்கும் தருவாயில் கூட இவ்விருவரும் ஆண்டவருடைய நாமத்தை மகிமை படுத்தியதை இதன் முலமாக நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.
கற்றுக்கொள்ளும் பாடம்:
நாம் இவ்வுலகத்தில் வாழ்கின்ற நாட்களில் இயேசு கற்பிதத்தை போல பிறர் நன்மைக்காய் ஒளி வீசுகின்ற பிள்ளைகளாக பிறர்க்கு நன்மைபயக்குகின்றவர்களாக சுயநலம் இன்றி பொது நலத்துடன் வாழ்வோம்.
எழுதியவர்
மனோஜ் கிஷோர்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments