Ad Code

ஆனந்தப் பண்டிகையை ஆசரிப்போம் பாலரே நாம் • Children Sunday Song


ஆனந்தப் பண்டிகையை 
ஆசரிப்போம் பாலரே நாம்

ஆசரிப்போம் பாலரே நாம் 
ஆர்ப்பரித் தகங்களிப்போம் - 2
அன்புடன் ஆலயத்தில் 
அம்பரனையே துதிப்போம்

1. இயேசுவின் ரத்தத்தால் - நாம் மீட்கப்பட்டோம் காக்கப்பட்டோம்
மீட்கப்பட்டோம் காக்கப்பட்டோம் 
மீட்டுமுடி சூட்டப்பெற்றோம் - 2
மீட்பரால் சங்கமதின் 
அங்கங்களாய்க் கூட்டப்பட்டோம்
 
2. பாலர் இச்சங்கத்தாலே 
பகவானருள் - வரமே பெற்றோம்
பகவானருள் வரமே பெற்றோம்
பரிசுத்தமெய் - வேதம் கற்றோம் - 2 பாரினில் பாலனான 
பரன்சுதன் நல்நேசர் கண்டோம்

3. செல்லுவோம் நேயர்களே சிலுவைக்கொடி கரம் பிடித்து
சிலுவைக்கொடி கரம் பிடித்து வலுசெய்பேயின் சிரமுடைத்து - 2 வல்லமைநாதன் - நாமவாழ்த்துதல் 
கீதம் படித்து 

4. எண்ணடங்கா நன்மைகள் 
எந்தை தந்தார் - சந்ததமே
எந்தை தந்தார் - சந்ததமே
என்றும் துதி - வந்தனமே - 2
இன்றும் ஆசீர்பெறுவோம் 
ஏக சகோதரரே வாரும்

5. உள்ளக் கருத்துடனே 
ஒருமித்த பாசத்துடனே
ஒருமித்த பாசத்துடனே 
உற்சாக மனதுடனே - 2
உன்னதனார் சமூகம் 
உவந்து காணிக்கைப் படைத்து

6. பெற்ற தாய் தந்தையரும் 
உற்ற பெந்து சகோதரரும்
உற்ற பெந்து - சகோதரரும் 
கற்றோர் மற்றோர் போதகரும் - 2 குற்றமென் றுரைத்திடும் 
துர்க்குணம் நீங்க - சற்குருவை வேண்டி 

7. பாலியர் சங்கமென்றும்
பக்தியுற முக்திபெற
பக்தியுற முக்தி பெற 
நித்தியமாய் - தூதர் சூழ - 2 
அத்தனை சுத்தரென்று 
ஆராதிக்கும் அருளே பெற


Sung by 
Rev. Gladson 
Balkar Banban
CSI TND 

Post a Comment

0 Comments