Ad Code

ஆண்கள் ஆரோக்கியமாக ஆடை அணிவது எப்படி? • Men's Healthy Life Style in Dressing • Men's Health

ஆடைகளின் வடிவம்
பதின்பருவம் (Teen Age) முதலே, டிரவுசர் / பாக்சர் மாடல் (T Model) உள்ளாடை (Underwear) அணிவது நல்லது. விந்தணுக்களின் இயக்கத்தை பாதிக்கும் "வி" வடிவ உள்ளாடைகளைத் தவிர்ப்பது நல்லது. 

ஆடைகளின் அளவு:
இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். தோல் எரிச்சல் மற்றும் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். இறுக்கமான உள்ளாடைகள் விதைப்பையைச் சுற்றியுள்ள வெப்பநிலையை அதிகரிக்கும், இது விந்தணுக்கள் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

அணியும் நேரம்:
உள்ளாடை (Underwear) அணியாமல் தூங்குவது காற்றோட்டத்தை அதிகரித்து, வெப்பநிலை சீராக இருக்க உதவும். உறுப்பு பெரிதாகி இயங்க வழிவகுக்கும். இது விந்தணு உற்பத்தி சரியாக இருக்க உதவும். ஆகவே தூங்கும் போது Underwear இல்லாமல், லுங்கி மட்டும் அல்லது டிரவுசர் மட்டும் அணிவது நல்லது.

துணிகளின் தரம்:
நல்ல தரமான துணிகளைத் தேர்ந்தெடுங்கள். பருத்தி (Cotton) போன்ற இயற்கை துணிகள் நல்ல தேர்வாக இருக்கும்.

சுத்தமான ஆடைகள்:
வியர்வை மற்றும் அழுக்கு துணிகளில் பாக்டீரியாக்களை உருவாக்கும். எனவே, ஒவ்வொரு நாளும் ஆடைகளை மாற்றி, சுத்தமான ஆடைகளை அணியுங்கள்.

இது பொது விழிப்புணர்வு பதிவுக்காக...

Post a Comment

0 Comments