சுய இன்பம் / சுய புணர்ச்சி (Masturbation) என்பது ஒரு தனிநபர் தன்னைத்தானே பாலுறவு மூலம் கிளர்ச்சியூட்டும் செயல். இது (கைப்பழக்கம்) பொதுவாக புணர்ச்சிப் பரவச நிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டது. இது செயற்கையானது. இதைக் குறித்து மருத்துவம், அறிவியல் பல கருத்துக்களை சொன்னாலும், வேதாகமம் பாவம் என்றே சொல்லுகிறது. Masturbation is self-killing sin like suicide
பைபிள் என்ன சொல்லுகிறது?
..... விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும் (Masturbation), ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
1 கொரிந்தியர் 6:9- 10
எப்படி விடுதலை அடையலாம் (How to overcome)?
1. தவறு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்:
You can’t stop masturbating if you are not convinced it is sinful. .இந்த அடிமைத்தனம் கடவுளுக்கு பிரியம் அல்ல; நல்லது இல்லை என்று உணர்ந்து, மனம் வருந்த வேண்டும்.
2. இறை உதவியை நாடுதல்:
உங்களை குணமாக்க கடவுளிடம் ஜெபியுங்கள் ( ரோமர் 10:13 ). அடுத்த முறை சுயஇன்பம் செய்ய வேண்டும் என்ற உந்துதலை நீங்கள் உணரும்போது, மெதுவாகச் சென்று ஜெபிக்கவும்.
3. அறிக்கை செய்தல்:
உங்களை தவறாக நினைக்காத ஒரு நம்பகமான நண்பரிடம் அறிக்கையிட்டு, ஆலோசனை பெறுங்கள் ( 2 தீமோத்தேயு 2:22 ). உங்கள் உந்துதலை வெளிப்படுத்தவும், உங்கள் சோதனையை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த தைரியம் அளிக்கவும் கடவுளிடம் கேட்டு முன்வாருங்கள். ( நீதிமொழிகள் 14:8 , நீதிமொழிகள் 18:1 )
4. பின்புலத்தை அறிந்து வெல்லுங்கள்:
இந்த பாவத்திற்கு இட்டுச் செல்லும் நேரங்கள், இடங்கள், பின்புலங்கள் (Pornography - masturbation’s metonym) மற்றும் அழுத்தங்களை அடையாளம் காணுங்கள். தனிமையை தவிர்த்து வீட்டில் உள்ளவர்கள் நண்பர்களுடன் அல்லது புத்தகம் வாசித்து நேரத்தை செலவிட்டு மனதை பக்குவப்படுத்த வேண்டும். சோதனை வந்தால் நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் என்பதை முன்கூட்டியே தயார் செய்யுங்கள். (1 கொரிந்தியர் 10:13 , 1 பேதுரு 5:8 , எபேசியர் 6:13 , எபிரெயர் 2:18 )
5. வாழ்வியல் மாற்றங்கள்:
உடலும் மனமும் தொடர்புயுடையது. உங்கள் வாழ்க்கை முறைகளை சரியான ஆலோசனையோடு மாற்றி அமைத்து, கைப்பழக்கம் என்றும் செயற்கை முறை தவிர்த்து, இயற்கையாக உள்ள தூக்கத்தில் விந்தணு வெளியேற (Night fall ) வழிவகுங்கள். உங்கள் ஆடை மற்றும் தூங்கும் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தி நலம் பெறுங்கள். இளம் ஆண் வாழ்வியல் முறை குறித்து வாசிக்க click here
தீமைகள்
• இது பாலியல் தூய்மையை கெடுக்கிறது. தன்னிலை சார்ந்து இருப்பதால் திருமண உறவில் இருந்து மாறுபட்டு இருக்கிறது.
• இதனால் விந்தணு உற்பத்தி & செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும்.
• இது சிலருக்கு மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
• இதை அடிக்கடி செய்யும் போது சரீரம் பலவீனம் ஆகும்.
• சீராக மனநிலை இருக்காது. சிந்தனைகளில் மாறுபாடு இருக்கும்.
• இந்த பழக்க வழக்கம் ஒரு வித அடிமைத்தனத்திற்குள்ளாக நடத்தக் கூடியதாக இருக்கிறது.
விடுதலை அடைந்த தொடக்கத்தில் நீங்கள் மீண்டும் சோதனையில் விழுந்தால் விரக்தியடைய வேண்டாம். கடவுளின் கிருபையும் அன்பும் நிபந்தனையற்றது (ரோமர் 8:1). முழுமையாக விடுதலை அடைய கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கையோடு பயணியுங்கள்.
Don't worry....
"You can overcome it by God's Love"
2 Comments
Thank you Meyego