Ad Code

திருப்பாடல் தியானம் 40 என் இறைவா, தாமதியாதேயும்! Psalm 40

திருப்பாடல் தியானம் 40
என் இறைவா, தாமதியாதேயும்!

சங்கீதம் 40 கடந்த கால மீட்புக்கான நன்றி செலுத்தும் பாடலாகவும், எதிர்கால உதவிக்கான வேண்டுகோளாகவும் பாடப்பட்ட தாவீதின் சங்கீதம் ஆகும். ஆழ்ந்த நெருக்கடியைக் கடந்து, கடவுளின் கிருபையால் ஒரு புதிய, நிலையான பார்வையைக் கண்டறிந்த இவரால் பாடப்பட்ட "மறுசீரமைப்பின் சங்கீதம்" ஆகும். 

 "பயங்கரமான குழி" மற்றும் "உளையான சேறு" போன்ற பதங்கள் வெளிப்புற உதவி இல்லாமல் தப்பிக்க முடியாது என்பதை வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழலில், கடவுள் தன்னை எவ்வாறு விரக்தியிலிருந்து மீட்டார் என்பதை தாவீது விவரிக்கிறார். தனது அழுகைக்குப் பதிலாக ஒரு "புதிய பாடல்" வந்திருப்பதை அவர் கொண்டாடுகிறார்.

கடவுளில் தனக்கு இருக்கும் மிகுந்த மகிழ்ச்சியின் உணர்வையும், தற்போதைய தேவையைப் பற்றிய யதார்த்தமான மதிப்பீட்டையும் தாவீது வெளிப்படுத்துகிறார். மேலும், அநேக தீமைகள் மற்றும் பாவங்கள் தன்னை முந்திக்கொண்டதாக சொல்லும் தாவீது தனக்கு மீண்டும் உதவுவதில் தாமதிக்க வேண்டாம் என்று கடவுளிடம் கெஞ்சுகிறார். 

கடவுள் தன்னைப் பற்றி அக்கறை கொண்டு, சிந்திக்கிறார் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, தாவீது மீண்டும் கடவுளிடம் உதவியாகவும் மீட்பராகவும் இருக்கும்படி வேண்டியுள்ளார். நாமும், சகாயம் செய்யும் கடவுளிடம் வேண்டுவோம். அவர் நமக்கு உதவி செய்வாராக.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments