துன்பங்களைத் தாண்டி துதிப்போம்
சங்கீதம் 41, தாவீது தனது வாழ்நாளில் நிறைய அனுபவமுள்ள வயதான ராஜாவாக எழுதியதாகும். பிறர் மீது மிகுந்த கரிசனை உள்ள தாவீது கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் (வசனம் 3) மற்றும் அவரது மரணத்திற்காக ஏங்கிய அவதூறு பேசும் "நண்பர்களால்" சூழப்பட்டிருந்த நேரத்தில், இந்த சங்கீதம் கடவுளின் கருணைக்காக ஒரு உணர்ச்சிமிக்க ஜெபமாகும்.
இந்த சங்கீத வசனங்களில் அவர் எழுதும் சோதனைகள் பெரும்பாலான மக்கள் தனியாக தாங்கிக்கொள்ள முடியாதவை. இவை அனைத்தையும் கடந்து சென்ற அவர் அனுபவத்தோடு சொல்லுகிறார்: "இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நித்தியத்திலிருந்து என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்படுவாராக!"
பிறருக்கு நன்மைகள் செய்த தாவீது தான் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு சோதனையிலும் கடவுள் அவரைத் தாங்கினார். பல துன்பங்களைச் சந்தித்தாலும் அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். ஆகவே தாவீது கடந்து வந்த அனைத்தும் கடவுள் எல்லா ஆசீர்வாதத்திற்கும் மரியாதைக்கும் புகழுக்கும் உரியவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments