Ad Code

டீன் ஏஜ் ஆலோசனை 3 ஆத்துமாவைக் காக்க பழகிக்கொள் Teens Life

Hai Friends,

போன் ஹார்ட்வார் (Hardware) எவ்வளவு அழகாக இருந்தாலும், உள்ளே இருக்கும் சாப்ட்வேர் (Software) சரியாக இல்லையென்றால் போன் 'ஹேங்' (Hang) ஆகிவிடும். வைரஸ் தாக்காமல் இருக்க நாம் எப்படி ஆன்டி-வைரஸ் போடுகிறோமோ, அதேபோல நம் Software ஆன ஆத்துமாவைத் தாக்காமல் காக்க வேண்டும்.
மனமும் சரீரமும் இந்த டீன் ஏஜ் ல எவ்வளவு முக்கியமோ, அதே போன்று தான் ஆத்துமாவும். ஆனால், ஆத்துமாவைக் குறித்த சிந்தை அதிகம் வராத ஒரு வயது தான் டீன் ஏஜ். 

காரணம் என்ன ?
• ஹார்மோன் மாற்றங்களால் உணர்ச்சிகள் மேலோங்கி இருப்பதால், 'அகத்தை' விட 'புறம்' சார்ந்த விஷயங்களே முக்கியமாகத் தெரியும்.
• உலகம் தன் திசையில் உன்னை இழுத்துக் கொண்டு செல்ல முயற்சிக்கும்.
• உடனடி அங்கீகாரம் (Instant Gratification) தேடும் இந்த வயதில், நித்தியம் குறித்து நிதானிக்க பொறுமை குறைவு.

பிறகு எப்படி ஆத்துமாவைக் காக்க முடியும்?

• "இன்று நான் செய்த செயல்கள் சரியானதா?", "யாரையாவது காயப்படுத்தினேனா?" என அன்றாடம் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்ய கேள்வி கேட்டுக்கொள்வது மனச்சாட்சியை (ஆத்துமாவை) விழிப்போடு வைத்திருக்கும்.
• டீன் ஏஜ் பருவத்தில் நண்பர்களின் வற்புறுத்தலால் (Peer Pressure) பல தவறான பழக்கங்கள் தொற்றிக்கொள்ளும். இதுக்கு No சொல்ல பழகு. இல்லை, எனக்கு இது பிடிக்கவில்லை" என்று தைரியமாகச் சொல்வதே சிறந்த வழி.
• திரையில் (Screens) தெரிவது நிஜமல்ல. உங்கள் ஆத்துமாவை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, உன் தனித்தன்மையை நேசிக்கப் பழகு.
• இஸ்ரவேல் தேசத்து தலைசிறந்த அரசர் தாவீது சொன்னது: கடவுளின் வார்த்தை உன்னை வாலிப வயதில் காக்க உதவும். ஆகவே, ஆத்துமாவை வேத வசனத்தினால் சுத்திகரித்து காத்துக்கொள்.

ஆத்துமாவை நீ மறந்து, சிற்றின்ப பிடியில் சிக்கிட இந்த உலகம் மயக்க முயற்சிக்கும். பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்பதை மறவாதே. ஞானமாக, இறை உதவியோடு, உன் விளையேற பெற்ற ஆத்துமாவைக் காக்க பழகிக் கொள். உணர்வுகளைக் கையாளுதல் எப்படி? Click Here

Written by
Meyego 

Post a Comment

0 Comments