பாலைவனத்தில் இறைத் தாகம்
சங்கீதம் 63 என்பது வறண்ட, பாழடைந்த "யூதாவின் வனாந்தரத்தில்" எதிரிகளிடமிருந்து தப்பியோடியபோது இயற்றப்பட்ட தாவீதின் சங்கீதம் ஆகும். அவரது மகன் அப்சலோமின் (2 சாமுவேல் 15-17) கலகத்தின் போது பயணித்த யூத வனாந்தரமாக நம்பப்படுகிறது.
கடவுளின் பிரசன்னத்திற்கான தாவீது ராஜாவின் தீவிர ஏக்கத்தை இந்த சங்கீதம் பிரதிபலிக்கிறது. இது துரோகமான சூழலில் கடவுளைச் சார்ந்திருக்க வலியுறுத்துகிறது. வேட்டையாடப்பட்ட சுழல் இருந்த போதிலும், தாவீது கடவுளின் பாதுகாப்பு மற்றும் அன்பில் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
தாவீது முன்பு புனித ஸ்தலத்தில் செய்தது போல் கடவுளின் வல்லமையையும் மகிமையையும் தேடுகிறார். உடல் ஆறுதலை விட ஆன்மீக திருப்தியை பெற்றிட, தாவீது மிகுந்த வாஞ்சையோடு இந்த சங்கீதத்தைப் பாடியுள்ளார்.
மோட்யர் சொல்லுகிறார்; "இந்த சங்கீதத்தின் முழு நோக்கமும் கர்த்தரைப் பற்றி அறியப்பட்ட அனைத்தையும் நினைவு கூர்வது, அவரை மனதில் வைத்திருப்பது, அவருடைய பிரசன்னத்தை விரும்பி அனுபவிப்பது, சத்தியத்தை உறுதிப்படுத்துவது மற்றும் கடவுளில் மகிழ்ச்சி அடைவதாகும்."
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments