புலம்பலும் ஜெபமாகட்டும்
சங்கீதம் 79 கி.மு. 586-ல் பாபிலோனியர்கள் எருசலேமையும் ஆலயத்தையும் அழித்த பிறகு, ஆசாப் எழுதிய ஒரு சமூகப் புலம்பல் ஆகும். இது 2 இராஜாக்கள் 25 மற்றும் 2 நாளாகமம் 36:11-21-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நேபுகாத்நேசர் அரசனின் கீழ் எருசலேம் வீழ்ச்சியடைந்ததோடு தொடர்புடையது.
இந்த சங்கீதம் அடிமைத்தனத்தின் ஒரு இருண்ட காலத்தைப் பிரதிபலிக்கிறது. எருசலேம் இடிபாடுகளாக மாற்றப்பட்டதையும்,சடலங்கள் புதைக்கப்படாமலும், அந்நிய தேசங்களால் ஆலயம் தீட்டுப்படுத்தப்பட்டும் கிடக்கும் ஒரு அதிர்ச்சிகரமான பேரழிவுக் காட்சியைச் சித்தரிக்கிறது. மேலும், இஸ்ரவேல் மக்கள் தங்கள் அண்டை அயலாரிடமிருந்து ஏளனத்தையும் இகழ்ச்சியையும் எதிர்கொண்டதையும் விவரிக்கிறது.
எரேமியாவின் புலம்பல்களைப் போலவே சங்கீதம்காரன் இறைவனிடம் செய்யும் ஊக்கமான ஜெபமாக விளங்குகிறது. "தங்கள் கடவுள் எங்கே?" என்று மற்ற தேசங்கள் ஏன் பரிகாசம் பண்ண வேண்டும் என்று
வினாவோடு தங்கள் முன்னோர்கள் மற்றும் தங்களின் அக்கிரமங்களை ஒப்புக்கொண்டு ஜெபிப்பதாகும். புலம்பலின் சூழலில் கண்ணீரோடு ஜெபிப்போம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ

0 Comments