Ad Code

திருப்பாடல் தியானம் 90 Psalm இரக்கத்தின் ஜெபம்

திருப்பாடல் தியானம் 90
இரக்கத்தின் ஜெபம்

சங்கீதம் 90 "மோசேயின் ஜெபம்" என்று தலைப்பிடப்பட்ட பாடலாகும். . "கடவுளின் மனிதர்" மோசேயால் இயற்றப்பட்டதால், இதுவே மிகப் பழமையான சங்கீதமாகும் (சுமார் கி.மு. 1500). இது இஸ்ரவேலர்கள் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். தெய்வீக நித்தியத்திற்கும் மனித பலவீனத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் பற்றிய ஒரு தியானமாகும்.

எகிப்தை விட்டு வெளியேறிய தலைமுறையின் கலகத்தின் விளைவாக ஏற்பட்ட மரணத்தை இந்த சங்கீதம் குறிப்பிடுகிறது (எண்ணாகமம் 13–14). மேலும் மோசே, தன் மக்களின் அன்றாட மரணத்தைக் கையாண்டார். இறை நீதியான கோபமே மூத்த தலைமுறையின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது என்று, மனித துன்பம் பாவத்துடன் தொடர்புடையது என்பதை இந்த சங்கீதம் ஏற்றுக்கொள்கிறது. 

ஆகவே மரணம் குறித்த மோசேயின் கண்ணோட்டத்தையும், கீழ்ப்படியாத தலைமுறையின் மீதான அடைக்கலமான கடவுளின் நியாயத்தீர்ப்பையும், ஞானம் மற்றும் இரக்கத்திற்கான ஜெபமாக பாடியுள்ளார். 

மனித வாழ்வு குறுகியதாகவும், பெரும்பாலும் உழைப்பும் துன்பமும் நிறைந்ததாகவும், சுமார் 70-80 ஆண்டுகள் மட்டுமே நீடிப்பதாகவும் விவரிக்கப்படுகிறது. நியாயத்தீர்ப்பு மற்றும் வனாந்தரத்தின் மத்தியிலும், இறைவன் தலைமுறைகளுக்கு "வாழிடமாகவும்" அடைக்கலமாகவும் இருப்பவர் கடவுள். 
இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ 
 

Post a Comment

0 Comments