Ad Code

உடைக்கப்பட்டவர்களுக்கான இறைநீதி • Divine Mishpat for the Broken Ones • March 2026

இறைமைந்தர் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள்.

இந்தாண்டு நாம் தியானித்து வருகின்ற மிஷ்பாட் - இறைநீதி தியானத்தின் மூன்றாவது பகுதிக்கான தலையங்கம்

உடைக்கப்பட்டவர்களுக்கான இறைநீதி

ஏசாயா 42:3 நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை (மிஷ்பாட்) நிலை நாட்டுவார். 

ஏசாயா 42 கிறிஸ்துவுக்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டு பாபிலோனிய சிறையிருப்பில் உள்ள இஸ்ரவேலர்களிடம் ஆறுதலையும் அவர்களின் அவநம்பிக்கையான சூழ்நிலையை சரிசெய்யும் எதிர்கால மீட்பரை உறுதியளிக்கிறது. இது ஏசாயா 40-55 இல் உள்ள நான்கு "ஊழியர் பாடல்களில்" (Songs of the Servants) முதலாவதாகும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆவியால் அதிகாரம் பெற்ற ஊழியரை (Messiah) அறிமுகப்படுத்துகிறது, அவர் தேசங்களுக்கு நீதியைக் கொண்டு வருவார் என்ற நீதியின் நம்பிக்கையின் செய்தியாகும். 

1. நெரிந்த நாணலை முறியாதவர் 
நெரிந்த (Crushed/Broken) நாணல் என்பது வாழ்க்கையில் முறிக்கப்பட்ட சோர்வுற்ற பலவீனமான சூழலில் கைவிட்டு சென்று அநீதி இழைப்பவர் நம் கடவுள் அல்ல.

👍 பாபிலோனில் சிறந்த ஞானியாக, சிறந்த நிர்வாகியாக இருந்த தானியேல் வாழ்வில் ஒரு முறிக்கப்பட்ட சூழல் வந்தது. சிங்கங்களின் கெபியில் தனிமையில் இருந்த போது, கடவுள் அப்படியே முறித்துவிடவில்லை. அங்கும் தம் நீதியை நிலைநாட்டினார்.

2. மங்கியெரிகிற திரியை அணையாதவர்
மங்கியெரியும் (Smoldering/Dimly burning) திரி என்பது அணைய போகும், நம்பிக்கையற்ற நிலையில் இருப்போரை பாதுகாக்கும் ஆண்டவர் என்பதைக் குறிக்கிறது.

👍 இறை சொப்பனம் கண்ட யோசேப்பு என்னும் திரியை அணைக்க முயன்ற அவன் சகோதரர், போத்திபாரின் மனைவி, திரியை மீண்டும் வலுப்படுத்த மறந்த போன பானபாத்திரக்காரன் தலைவன் ஆகியோரின் சூழலிலும், நம் கடவுள் மீண்டும் யோசேப்பு என்னும் திரியை பிரகாசிக்க செய்து நீதியை நிலைநாட்டினார். 

மத்தேயு 12. 20 இயேசுவைக் குறித்து சொல்லுகிறது: "அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்." 

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments