கடவுளின் ஹெசெட்
சங்கீதம் 103 என்பது தாவீதுக்கு எழுதிய ஒரு பிரியமான துதிப்பாடலாகும். தாவீதின் வாழ்க்கையின் பிற்காலங்களில், அவர் தனது சொந்தப் பாவத்தையும் கடவுளின் விலையுயர்ந்த மன்னிப்பையும் ஆழமாக உணர்ந்திருந்தபோது சங்கீதம் 103 எழுதப்பட்டது . இது மனிதனின் பாவத்தை விட, அதை மன்னிக்கும் இறை இரக்கம், மன்னிப்பு மற்றும் கருணையை மையமாகக் கொண்டுள்ளது. இது
இந்த சங்கீதம் கடவுளின் அன்பான தயவிற்கு (ஹெசெட்) ஆழ்ந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தி பாடியதாகும்.. கடவுளின் ஹெசெட்—உறுதியான, உடன்படிக்கை அன்பு—மற்றும் அவருடைய கருணையை (ரெகெம், அதாவது "கருவறை போன்ற" பாசம்) பெரிதும் வலியுறுத்துகிறது. மேலும் கடவுளின் மென்மையான பராமரிப்பை ஒரு தந்தையின் கருணையுடன் ஒப்பிட்டு உள்ளது.
இந்த சங்கீதம் தாவீதுக்கு ஒரு 'மனிதனும் கண்ணாடியும்' போன்ற தருணமாகும். தன்னால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிக அற்புதமான ஆசீர்வாதங்களையும் மகிழ்ச்சிகளையும் கடவுள் தனக்குக் கொடுத்திருக்கிறார் என்று தாவீது தனக்குத்தானே பேசிக்கொள்கிறார் .
1. கடவுளின் தனிப்பட்ட நன்மைகளான மன்னிப்பு, சுகம் மற்றும் மீட்பு ஆகியவற்றிற்கான தனிப்பட்ட துதி. (V 1–5).
2. பலவீனமான மனிதர்கள் மீதான அவருடைய கருணை (v 6–19)
3. சர்வ சிருஷ்டியும் தேவதூதர்களும் துதியில் இணைய வேண்டும் என்ற அழைப்பு (v 20–22)
இரக்கத்தின் கடவுளைப் புகழவும், அவருடைய எல்லா நன்மைகளையும் மறக்காமல் இருக்கவும் நமக்குச் சொல்கிறது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ

0 Comments