சுற்றுலா என்றவுடன்
பேருந்து கூரையில் கூட - இடம்
பிடிக்கிறது கூட்டம்!
ஜெபக் கூட்டம் என்றவுடன்
ஆலய நாற்காலிகள் எல்லாம் - இங்கே
காத்திருக்கிறது தனிமை!
சந்தோஷத்தில் துள்ளும் மனம் - ஏன்
சந்நிதியில் மட்டும் மெல்லத் தூங்கும்?
ஆடம்பரத் திருவிழாவல்ல சபை,
அது ஆத்மாவைத் தேற்றும் இறை இல்லம்!

0 Comments