கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாள் (ஞாயிறு) ஈஸ்டர் பண்டிகை
தேதி: 05/04/2026
வண்ணம்: வெள்ளை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: யோபு 19:23-29
நிருப வாக்கியம்: 2 கொரிந்தியர் 5:1-11
நற்செய்தி பகுதி: மாற்கு 16:1-11
சங்கீதம் 35:18-28
2. திருவசனம்
தலைப்பு: கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் யோபு 19:25
பவர் திருப்புதல் : என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
திரு விவிலியம் : ஏனெனில் என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
கிறிஸ்து மரணத்தை வென்று உயிரோடு எழுந்த திருநாள் & வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்: யோபு அல்லது அவரைப் பற்றி அறிந்த ஒருவர்
அவையோர்: இஸ்ரவேல் மக்கள்
வசன பின்னணி: யோபுவின் இழப்புக் குறித்து அவரது நண்பர்கள் யோபுவைக் குற்றம் சாட்டி, தவறு செய்ததன் விளைவை அனுபவிக்கிறீர் எனும் போது, தனக்காக உங்கள் வாதங்களை எதிர்த்து கர்த்தர் வாதிடுவார் என யோபு நம்பிக்கையில் கூறிய வார்த்தைகள்.
5. திருவசன விளக்கவுரை
யோபுவின் வாழ்க்கையை குற்றம் சாட்டியே முடித்துப்போட்ட நண்பர்கள் முன்னிலையில் என் வாழ்வின் புது துவக்கமாக என் மீட்பர் இருக்கிறார் என நம்பிக்கைக் கொள்கிறார் (V. 25 a). தனக்காக தனது வாழ்வின் உத்தமத்தை சாட்சி கூற இந்த பூமியில் எவரும் இல்லை என்பதை அறிந்த யோபு, நான் நம்பும் என் கர்த்தர் என் சார்பில் எழுந்தருளுவார் என உறுதி கூறுகிறார் (V. 25 b). தன்னை மீட்டுக்கொண்ட இறைவனை இவ்விதமாக அறிந்து கொண்ட யோபு, தன் வாழ்வில் இழப்புகள், துரோகப் பேச்சு, அவமானம் வந்தாலும் ஆண்டவருக்காக உறுதியாக செயல்பட ஊக்கப்படுத்தியது (V.25).
6. இறையியல் & வாழ்வியல்
தன்னை மீட்ட கடவுளுக்கு சாட்சியாக தனது நேர்மையான நடத்தையை சான்றாக வாழ்ந்து காட்டிய யோபு எனும் மனிதரைப் போல நமது வாழ்வும், நம்பிக்கையும், சொல்லும் செயலும் நமக்காக மரித்து உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்பதே இந்த பண்டிகையில் நாம் எடுக்கும் தீர்மானமாக இருக்கட்டும்.
7. அருளுரை குறிப்புகள்
அ) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்: மறுவாழ்வின் நம்பிக்கை - யோபு 19:25 a &
ஆ) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்: கடவுள் என்றும் நம் சார்பில் - யோபு 19:25 b
இ) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்: கடவுளை அறிந்து செயல்பட தைரியப்படுத்துகிறது - யோபு 19:25
சகோ. கிறிஸ்து ராசையா
சபை ஊழியர்

0 Comments