வழிபட எச்சரிப்பின் அழைப்பு
சங்கீதம் 95 என்பது ஒரு கூட்டுத் துதி மற்றும் எச்சரிக்கை சங்கீதமாகும். சங்கீதம் 95-க்கு ஆசிரியர் யார் என்று குறிப்பிடப்படவில்லை, ஆனால் எபிரேயர் 4:7 தாவீதுக்கு உரியதாகக் குறிப்பிடுகிறது. இது யாவேவை ராஜாவாகவும் சிருஷ்டிகராகவும் கொண்டாடுவதற்காக, இஸ்ரவேலின் இலையுதிர் கால "அரியணை ஏற்ற" பண்டிகைக்காக இயற்றப்பட்டிருக்கலாம். மரபு சபைகளில் ஞாயிறு வழிபாட்டில் அழைப்புரையாக பாடப்படுகிறது.
1. ஆராதனை அழைப்பு
மகிழ்ச்சியான ஆராதனைக்கான அழைப்பு மற்றும் தேவனை ராஜாவாகவும் சிருஷ்டிகராகவும் பிரகடனம் செய்தல் (V 1-7a). விசுவாசிகள் நன்றியுணர்வு நிறைந்த இருதயத்துடன் இறைவனை அணுகவும், ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிக்கவும் ஓர் அழைப்பாக விளங்குகிறது. துதியைக் கீழ்ப்படிதல் மற்றும் தாழ்மையுடன் சமநிலைப்படுத்த வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
2. எச்சரிக்கை:
இறைவனின் சத்தத்திற்குக் செவிகொடுத்து, வனாந்தரத்தில் முன்னோர்களின் விசுவாசமற்ற கலகத்தை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான ஒரு தீர்க்கதரிசன எச்சரிக்கை (7b -11). எகிப்திலிருந்து வெளியேறிய தலைமுறையின் வரலாற்றுத் தோல்வியை ஒரு எச்சரிக்கைக் கதையாகப் பயன்படுத்தி, ஒருவரின் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு எதிராக இது எச்சரிக்கிறது.
மாசா மற்றும் மெரிபாவில் நடந்த வனாந்தரக் கலகத்தைக் குறிப்பிட்டு, கீழ்ப்படியாமைக்கு எதிரான ஒரு தீவிரமான எச்சரிக்கையாக உள்ளது.
அவரைத் துதித்து ஆராதிக்கும் நமது இருதயம் கடினமாக உள்ளதா? கீழ்ப்படியும் வண்ணம் உள்ளதா? சிந்தித்து செயல்படுவோம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ

0 Comments