அணுகக்கூடிய இறைவன்
சங்கீதம் 99 என்பது ஒரு அரியணை ஏறும் சங்கீதமாகும் (93, 95–99 தொடரின் ஒரு பகுதி). மசோரெடிக் மூல உரையில் இதற்குத் தலைப்பு இல்லை, ஆனால் செப்டுவஜின்ட் பதிப்பில் "தாவீதின் சங்கீதம்" என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. சீயோனிலிருந்து ஆட்சி செய்யும் பரிசுத்த, சர்வலோக ராஜாவாகிய யாவேவைக் கொண்டாடும் இந்த சங்கீதம், இஸ்ரவேலரின் வழிபாட்டுப் பண்டிகைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இந்த சங்கீதம் கடவுளை "கேருபீன்களுக்கு இடையில் அரியணையில் வீற்றிருப்பவர்" என்று விவரிக்கிறது. அதே நேரத்தில், மோசே, ஆரோன் மற்றும் சாமுவேல் போன்ற தலைவர்கள் மூலம் அவர் தம் மக்களுக்கு எவ்வளவு எளிதில் அணுகக்கூடியவராக இருக்கிறார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. இறைப் பாதபீடமாகக் கருதப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியை நேரடியாகக் குறிப்பிடுகிறது.
இது மும்முனைப் பல்லவியால் சிறப்பிக்கப்படும் இறைவனின் மகத்துவம், நீதி மற்றும் பரிசுத்தத்தை வலியுறுத்துகிறது. இந்த சங்கீதம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் இறைவனின் பரிசுத்த சுபாவத்தின் ஒரு அம்சத்தை எடுத்துக்காட்டுகிறது
1. ஆட்சியில் பரிசுத்தர்
2. நீதியில் பரிசுத்தர்
3. நேர்மையில் பரிசுத்தர்).
நம் கடவுள் அணுகக்கூடியவர்; ஆயினும் பரிசுத்தமானவர். "God isn't simply there; He is a reigning king; but He is available for His people."
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ

0 Comments