Ad Code

பிரசங்கிக்க ஆலோசனை • Guidance for Preaching

முதல் முறை புனித வெள்ளி மும்மணி தியான வழிபாட்டில் பிரசங்கிக்க இருப்போருக்கு ஆலோசனை:

1. நீங்கள் பிரசங்கிக்கும் முன் நன்றாக ஜெபித்து ஆயத்தம் செய்யுங்கள். 
2. உங்கள் வசன அளவு சிறியது எனினும், அதன் பின்னணி மற்றும் சரியான அர்த்தம் அறிந்து ஆயத்தம் செய்யுங்கள். 
3. நடைபெற்ற உண்மை சம்பவங்கள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள். கட்டாயம் இல்லை.
4. உங்கள் பிரசங்க நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே.
5. உங்கள் வசனத்தின் அடிப்படையில் ஒரு தலைப்பில் பேசுங்கள். துணைத் தலைப்புகள் தேவையில்லை.
6. பிரசங்கத்தில் 2 அல்லது 3 துணை தலைப்புகள் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள். 4 அல்லது அதற்கு மேற்பட்ட துணை தலைப்புகள் வேண்டாம். 
7. பிரசங்கத்திற்கு முன் ஆரம்ப ஜெபம் & பின்பு முடிவு ஜெபம் மற்றும் ஜெப பாடல் போன்றவை வேண்டாம். 
8. அதிக ஒத்த வாக்கிய வசனங்களை வாசிக்க வைக்க வேண்டாம். 
9. வீண் வாழ்த்து மற்றும் சொந்த கதைகள் வேண்டாம். 
10. கடின சொற்கள், வேகமாக பேசுதல், மற்றும் சொன்னதையே சொல்வது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

முதல் முறை பிரசங்கிக்கும் உங்களுக்கு மேயேகோ.இன் அன்பின் வாழ்த்துகள். இறையாசி
உங்களோடிருப்பதாக...

Post a Comment

0 Comments