அன்புக்குரிய வாக்காளர்களே!
நீங்கள் வாக்களிக்கும் முன் இதைக் கட்டாயம் வாசித்து சிந்தியுங்கள்....
1. வாக்களிப்பது (Voting) நம் கடமை மட்டுமல்ல: நமது உரிமை. இதை தவறவிடக் கூடாது.
2. நான் இத்தனை ஆண்டுகாலம் இந்த குறிப்பிட சின்னத்திற்கு தான் வாக்கு (ஓட்டு) போட்டேன். இந்த முறை எப்படி மாற்றி போடுவது என்று எண்ணுவது தவறு. ஓட்டுப் போடுவது பாரம்பரிய சடங்கு முறை அல்ல.
3. உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார் என முதலில் அறிந்து கொள்ளுங்கள். வெற்றி பெற்ற பிறகு அந்த வேட்பாளரைச் சந்தித்து உங்கள் பகுதிப் பிரச்சினைகளைச் சொல்ல முடியுமா? அவர்கள் ஆதரிக்கும் கட்சியின் முதல்வர் வேட்பாளர் எப்படிப்பட்டவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
4. கட்சி பிடிக்கும், அவரைப் பிடிக்கும் என்பதற்காக தெரிவு செய்ய வேண்டாம். வேட்பாளர் மீது ஏதேனும் கிரிமினல் வழக்குகள் அல்லது ஊழல் புகார்கள் உள்ளனவா? என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
5. வாக்குக்குப் பணம் வாங்கிக் கொண்டு, அந்தக் கட்சிக்கு வாக்கு அளிப்பது முறையான செயல் அல்ல. இதனால் தான், நம் சொந்த மண்ணில் தண்ணீரைக் கூட விலைக் கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளோம்.
6. கட்சி கொடுத்துள்ள வாக்குறுதிகள் நடைமுறைக்குச் சாத்தியமானவையா அல்லது வெறும் கவர்ச்சித் திட்டங்களா? விவசாயிகளின் நலன் மற்றும் சிறு தொழில்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் என்ன? என்பதை அறிய வேண்டும்.
7. ஒரு ஐந்தாண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை மட்டுமல்ல, எதிர்கால சந்ததியையும் கருத்தில் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
8. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க என்ன திட்டங்களை முன்வைக்கிறார்கள்? என்பதை அறிய வேண்டும்.
9. குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அல்லாமல், உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி நீங்களே முடிவெடுங்கள்.
10. "யார் வந்தால் என்ன?" "நான் போட்டு இவர் ஜெயிப்பாரா?" என்ற சலிப்பை விடுத்து, உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். உங்கள் ஒரு வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் வாக்கு உங்கள் உரிமை; அது உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் வலிமை கொண்டது!
மேயேகோ

0 Comments