Ad Code

பிறரை உற்சாகப்படுத்துதல் – அப்போஸ்தலர் 27:22 Paul's Life

பவுலடிகளார் பயணத்தின்று பாடம் 24
பிறரை உற்சாகப்படுத்துதல் – அப்போஸ்தலர் 27:22

பவுல் கைதியாக ரோமாபுரிக்குக் கப்பலில் கொண்டு செல்லப்படும்போது, பயங்கரமான புயல் வீசியது. கப்பலில் இருந்த அனைவரும் உயிர் பிழைக்கமாட்டோம் என்று நம்பிக்கையிழந்த நிலையில், பவுல் எழுந்து நின்று அவர்களைத் தைரியப்படுத்துகிறார். "உங்களில் ஒருவனுக்கும் உயிர்ச்சேதம் வராது, கப்பல் மாத்திரம் சேதமடையும்" என்று கூறி, தேவனிடமிருந்து பெற்ற வாக்குத்தத்தத்தை அவர்களுக்குத் தெரிவிக்கிறார்.

 1. ஒரு நெருக்கடியான நேரத்தில் மற்றவர்களுக்குத் தைரியம் சொல்பவனா நான், அல்லது பயத்தைப் பரப்புபவனா?
 2. மற்றவர்கள் நம்பிக்கையிழந்து இருக்கும்போது, அவர்களுக்குக் கடவுளின் வார்த்தைகளைக் கூறி உற்சாகப்படுத்துகிறேனா?

ஒரு பிரச்சனை வரும்போது புலம்பாமல், அவர்களுக்கு நம்பிக்கை தரும் நபராக மாற வேண்டும்.தானும் ஒரு கைதியாகப் பாடுபட்டும், தன்னைப் பாதித்த சூழலை விடச் சுற்றியுள்ளவர்களின் மன அழுத்தத்தைப் போக்க பவுல் முன்வந்தார். கடவுள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை, மரண பயத்தில் இருப்பவர்களையும் தேற்றும் வல்லமை கொண்டது.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

Lessons from Paul's Life Journey 

Acknowledgement 
Meyego 

Post a Comment

0 Comments