Ad Code

எந்த நிலைமையிலும் மனதிருப்தி – பிலிப்பியர் 4:11 • Satisfication • Paul's Life

பவுலடிகளார் பயணத்தின்று பாடம் 09
எந்த நிலைமையிலும் மனதிருப்தி – பிலிப்பியர் 4:11

பவுல் சிறையில் இருந்தபோது எழுதிய கடிதம் இது. பற்றாக்குறை, துன்பம் மற்றும் சிறைவாசம் போன்ற கடினமான சூழல்களிலும் அவர் சோர்ந்து போகாமல், தனக்குள்ளே இருக்கும் தெய்வீக சமாதானத்தைப் பற்றி இங்கு பேசுகிறார். "என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" என்கிறார். இங்கு மனரம்மியம் அல்லது மனதிருப்தி (Contentment) என்பது வெளிச்சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்ல; அது ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு மனப்பக்குவம். மேலும், இது சோம்பேறித்தனம் அல்ல, மாறாக இறைவனின் பராமரிப்பில் வைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை.

 1. என் மகிழ்ச்சிப் பொருட்கள் மற்றும் வசதிகளைச் சார்ந்து இருக்கிறதா அல்லது என் மனநிலையைச் சார்ந்ததா?
 2. பற்றாக்குறை ஏற்படும் போது நான் இறைவனை முறுமுறுக்கிறேனா அல்லது அவர் தருவார் என்று பொறுமையோடு இருக்கிறேனா?
 3. "போதும்" என்கிற மனம் எனக்கு இருக்கிறதா?

மகிழ்ச்சி என்பது நாம் எதைப் பெற்றிருக்கிறோம் என்பதில் இல்லை, நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதிலேயே இருக்கிறது. ஒப்பிடப்படுதல் (Comparison) தான் மனதிருப்தியின் எதிரி. நம்மிடம் இல்லாததை எண்ணி வருந்துவதை விட, இருப்பதை வைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் போது எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் இறைபலம் கிடைக்கிறது.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

Lessons from Paul's Life Journey 

Acknowledgement 
Meyego 

Post a Comment

0 Comments