பிரான்ஸ் நாட்டின் லியோன்ஸ் நகரின் ஆயராக இருந்தவர். அக்காலத்தில் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த 'ஞானவாதம்' (Gnosticism) என்ற தவறான போதனைக்கு எதிராக ஐந்து புத்தகங்கள் எழுதினார். நான்கு நற்செய்தி நூல்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) மட்டுமே உண்மையானவை என்பதை உறுதியாக நிலைநாட்டியவர் இவரே. உரோமைத் திருச்சபையின் முதன்மையையும், அப்போஸ்தலிக்க வழிமரபின் முக்கியத்துவத்தையும் பெரிதும் வலியுறுத்தினார்.

0 Comments