எகிப்தின் அலெக்சாந்திரியா நகரின் ஆயர். இயேசு கிறிஸ்து கடவுளால் படைக்கப்பட்ட ஒரு பொருள் மட்டுமே, அவர் முழுமையான கடவுள் அல்ல என்று போதித்த அரியுஸ் கொள்கைக்கு எதிராகத் தனி ஆளாக நின்று போராடினார். இதனால் இவர் ஐந்து முறை தன் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். கி.பி. 325 இல் நடந்த நைசியா பொதுச்சங்கத்தில் இயேசுவின் இறைத்தன்மையை நிலைநாட்ட முக்கியக் காரணமாய் இருந்தார். புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களை முதன்முதலில் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டவர் இவரே.

0 Comments