கிறிஸ்தவ சீர்திருத்தவாதி மார்ட்டின் லூத்தர் கிங்-ன் மனைவி இவ்வாறு கூறினார், ‘என் வாழ்க்கையில் கடவுள் சில வேதனைகளைக் கொண்டு வராதிருந்தால் சங்கீத புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள சில வரிகளின் பொருளை நான் அறியாதிருந்திருப்பேன்’ என்று!
நெருக்கங்களின் பாதையில் தான் நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் வராதிருந்தால் நாம் நமக்கு இருக்கும் சொந்த பெலனையே நம்புவோம். பெரிய திட்டத்தோடு உண்டாக்கிய கடவுள், அந்த திட்டம் நிறைவேறவே இப்படிப்பட்டதான பாதையில் அழைத்துச் செல்கிறார். அப்படி நாம் செல்லும்போது இறைவா, நான் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை கற்றுக்கொண்டு நீர் விரும்புகிற விதமாய் உருவாக எனக்கு உதவி செய்யும் என ஜெபித்துக் கடப்போம்.
சங்கீதம் 119:71: "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்."

0 Comments