டார்க் வெப்னா என்ன பாஸ்?
நம்ம டெய்லி யூஸ் பண்ற கூகுள், யூடியூப், அமேசான் எல்லாம் வெறும் 5% தான். கடலுக்கு அடியில இருக்கிற மீதி 95% பனிப்பாறை மாதிரி ஒளிஞ்சிருக்கிறது தான் இந்த டார்க் வெப். சும்மா நார்மல் பிரவுசர்ல இத ஓபன் பண்ண முடியாது, அதுக்கு 'டோர்' (Tor) மாதிரியான ஸ்பெஷல் பிரவுசர் வேணும்.
இங்க வர்றவங்க யாரு, போறவங்க யாருன்னு கண்டுபிடிக்கவே முடியாது. அதனாலயே இது தப்பான ஆளுங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி போச்சு!
அங்க என்னதான் நடக்குது? (ஆபத்துகள்)
பிளாக் மார்க்கெட்: கள்ளச்சந்தையில கிடைக்காததே இல்லை. டிரக்ஸ், துப்பாக்கிகள், போலி பாஸ்போர்ட்ல ஆரம்பிச்சு, அடுத்தவன் கிரெடிட் கார்டு டீடைல்ஸ் வரைக்கும் எல்லாமே இங்க ரேட் பேசி விக்கிறாங்க.
டிரக்ஸ் (Drugs), போதைப்பொருட்கள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் ரகசிய குற்றச் செயல்களுக்காக டார்க் வெப் (Dark Web) எனப்படும் இணையத்தின் மறைமுகப் பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஹேக்கர்ஸ் கடைய விரிச்சிருக்காங்க: மத்தவங்க சிஸ்டத்த லாக் பண்ணி காசு கேக்குற ரான்சம்வேர், மால்வேர் சாப்ட்வேர்லாம் இங்க சீப் அண்ட் பெஸ்ட்டா கைமாறுது.
நம்ம டேட்டா கசிவு: ஏதோ ஒரு கம்பெனில இருந்து திருடப்பட்ட நம்ம போன் நம்பர், பாஸ்வேர்டு, ஐடி கார்டு விபரங்கள் எல்லாமே இங்க கம்மி விலைக்கு ஏலம் போகுது.
பிட்காயின் விளையாட்டு: இங்க காசுக்கு வேலையே இல்லை, எல்லாமே கிரிப்டோகரன்சி தான். ஏமாந்தா போலீஸ்ல கூட கம்ப்ளைன்ட் பண்ண முடியாது; ஏன்னா அனுப்புனது யாரு, வாங்குனது யாருன்னே தெரியாது.
நம்ம எப்படி உஷாரா இருக்கிறது? (Simple Safety Rules)
நம்ம டேட்டா டார்க் வெப்புக்கு போகாம இருக்க இந்த 4 விஷயத்தை மைண்ட்ல வச்சுக்கோங்க:
1. கண்ட லிங்க்கையும் கிளிக் பண்ணாதீங்க!
வாட்ஸ்அப்ல "உங்களுக்கு 5000 ரூபாய் பரிசு விழுந்திருக்கு"ன்னு வர்ற லிங்க், இல்லன்னா தெரியாத எஸ்எம்எஸ் லிங்க்குகளை தொடவே தொடாதீங்க. அது உங்க பாஸ்வேர்டை திருடுறதுக்காக வச்ச தூண்டிலா இருக்கலாம் (Phishing).
2. பாஸ்வேர்டு ஸ்ட்ராங்கா இருக்கணும்
உங்க பர்த்டே, பைக் நம்பர், '123456' - இதையெல்லாம் பாஸ்வேர்டா வச்சா ஹேக்கர்ஸே உங்கள பார்த்து சிரிப்பாங்க. எல்லா அக்கவுண்ட்டுக்கும் ஒரே பாஸ்வேர்டு வைக்காதீங்க. கேபிட்டல் லெட்டர், நம்பர், சிம்பல் (@, #, $) கலந்து மாஸா வைங்க.
3. 2FA-வை ஆன் பண்ணுங்க
கூகுள், இன்ஸ்டா, பேங்கிங் ஆப்ஸ்ல Two-Factor Authentication (2FA)-வை உடனே ஆன் பண்ணுங்க. உங்க பாஸ்வேர்டே திருடன் கைக்கு போனாலும், உங்க போனுக்கு வர்ற OTP இல்லாம அவனால உள்ள நுழைய முடியாது.
4. ஃப்ரீ வைஃபை-ல உஷார்!
ரயில்வே ஸ்டேஷன், ஹோட்டல்ல ஃப்ரீயா வைஃபை கிடைக்குதேன்னு கனெக்ட் பண்ணி, கூகுள் பே பண்றது, நெட் பேங்கிங் லாகின் பண்றதெல்லாம் விபரீதம். அந்த நெட்வொர்க்ல ஹேக்கர்ஸ் பதுங்கியிருக்க வாய்ப்பு இருக்கு.
> "சும்மா வேடிக்கை பார்க்குறேன்"னு ஆர்வக்கோளாறுல டார்க் வெப்க்குள்ள போகவே போகாதீங்க. அங்க இருக்கிற ஏதோ ஒரு லிங்க்கை கிளிக் பண்ணா, உங்க போன்/லேப்டாப்ல வைரஸ் ஏறிடும். இல்லன்னா, தெரியாம ஏதாவது சட்டவிரோத ஃபைலை டவுன்லோட் பண்ணி நீங்க தேவையில்லாம மாட்டிப்பீங்க.
Keep Distance, Stay Safe!
...
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கியக் குறிப்பு:
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் வழக்கத்திற்கு மாறாகத் தனிமையில் இருப்பது, அடையாளம் தெரியாத கொரியர் பார்சல்கள் வருவது அல்லது கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது தெரிந்தால் உடனடியாகக் கவனியுங்கள். டார்க் வெப் போன்ற தளங்களைச் சாதாரண பிரவுசர்கள் மூலம் அணுக முடியாது (எ.கா: Tor Browser). பிள்ளைகளின் மொபைலில் இத்தகைய செயலிகள் உள்ளதா என்பதைக் கண்காணிப்பது அவசியம்.
தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் (Tamil Nadu Cyber Crime Department) டார்க் வெப் மூலமாக நடக்கும் குற்றங்களைக் கண்காணிக்கத் தனிப் பிரிவை அமைத்துக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏதேனும் சைபர் குற்றங்கள் நடந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்

0 Comments