யாக்கோபு - துணிவோடு செயல்படுவோம்
1. பெயர்: யாக்கோபு (பெரிய யாக்கோபு - James, the Great)
2. அர்த்தம்: 'பின்பற்றுபவர்', 'கடவுள் காப்பார்' அல்லது 'குதிங்காலைப் பிடிப்பவர்' (எபிரேய மூலப் பெயரான யாக்கோபு என்பதிலிருந்து உருவானது).
3. சிறுகுறிப்பு:
• இவர் செபதேயு மற்றும் சலோமி ஆகியோரின் மகன்
• திருத்தூதர் யோவானின் சகோதரர்
• மீன்பிடித் தொழிலைச் செய்துவந்த இவரை இயேசு தம் சீடராக அழைத்தார். இவரின் தீவிரமான சுபாவத்திற்காக
• இவரும் இவர் சகோதரரும் "இடியின் மக்கள்" (Boanerges) இயேசுவால் அழைக்கப்பட்டனர்.
• பன்னிரு திருத்தூதர்களில் முதன்முதலில் கி.பி 44-ல் ஏரோது மன்னனால் கொல்லப்பட்டார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசுவுக்காகத் தன் சுயநல எண்ணங்களை மாற்றி, எத்தகைய துன்பங்களையும் எதிர்கொள்ளத் துணிச்சலோடு (இடியின் மகனாக) முன்வந்தார். இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் பங்குபெற இயலும் என்ற வாக்கைப் போல் உயிர்மூச்சு வரை வாழ்ந்தார். சீடர்களுள் முதல் மறைசாட்சி இவரே.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 4:21-22- இயேசுவால் சீடனாக அழைக்கப்படுதல்.
மாற்கு 3:13-19 - பன்னிருவரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுதல்.
லூக்கா 9:51-56 - சமாரிய ஊரில் கோபமடைதல்.
மத்தேயு 20:20-28 - பொறுப்புக்களுக்காகக் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் துன்பக் கிண்ணம் பற்றிய முன்னறிவிப்பு.
அப்போஸ்தலர் 12:1-2 - இவரின் உயிர்த்தியாகம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments