திருவசன தியானம்
1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்தெகோஸ்தே திருநாளுக்குப் பின்வரும் 2-ம் ஞாயிறு
தேதி : 07/06/2026
வண்ணம் : பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: 2 நாளாகமம் 20:13-19
நிருப வாக்கியம்: அப்போஸ்தலர் 18:24-28
நற்செய்தி பகுதி: யோவான் 8:12-20
சங்கீதம்: 89:19-37
2. திருவசனம்
தலைப்பு: இயேசு: ஞானத்தின் ஊற்று
இருப்பிடம்: கொலோசெயர் 2:3
திருவசனம்:
(பவர் திருப்புதல்) அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
(திருவிவிலியம்) ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
புதிய கல்வி ஆண்டின் ஆரம்பம் கல்வி ஞாயிறு ஆகும்.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்: அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல்
அவையோர்: கொலோசே பட்டணத்தின் திருச்சபை மக்கள்
வசன பின்னணி:
கள்ள உபதேசமான உலக ஞானத்தை நம்பாமல் பரத்திலிருந்து வரும் ஞானத்தை (கிறிஸ்து) அறிந்து கொள்ள வேண்டும் என்ற பின்னணியில் எழுதப்பட்டது.
5. திருவசன விளக்கவுரை
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான வார்த்தைகள் *ஞானம், அறிவு & கிறிஸ்துவில் மறைந்திருக்கிறது* என்பதாகும். அறிவு என்பது உண்மையைப் புரிந்து கொள்வதாகும். ஞானம் என்பது புரிந்து கொண்ட உண்மையை வாழ்வில் செயல்படுத்துவதில் உள்ளது. இவை இரண்டுமே கிறிஸ்துவில் மறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. பிதாவாகிய கடவுளின் திட்டங்களும் செயலும் மனிதனின் அறிவுக்கும், ஞானத்திற்கும் புலப்படும் வண்ணம் கிறிஸ்துவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என பவுல் கூறுகிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
கிறிஸ்துவே நமது வாழ்வில் ஞானத்தின் ஊற்று. யாருக்கும் தெரிவிக்கப்படாத மீட்பின் திட்டம் கிறிஸ்துவின் மூலமாக மனிதனுக்கு வெளியாக்கப்பட்டது. ஆகவே, இந்த உலகத்தில் கல்விக்கும், படித்த கல்வியை செயல்படுத்துவதற்கும் இயேசு கிறிஸ்து ஒருவரே நமக்கு ஞானத்தைத் தருபவர்.
7. அருளுரை குறிப்புகள்
அ) ஞானத்தை அடையும் வழி (2 நாளாகமம் 20:13-19)
ஆ) ஞானத்தை பயன்படுத்தும் முறை (அப்போஸ்தலர் 18:24-28)
இ) ஞானத்திற்காக சாட்சியாக வாழ்தல் (யோவான் 8:12-20)
எழுதியவர்
திரு. கிறிஸ்து ராசையா
சபை ஊழியர்

0 Comments