திருமறையில் யார் இவர் யாரோ? - 06
சீமோன் பேதுரு : விழுந்தாலும் மீள்வோம்
1. பெயர்: சீமோன் பேதுரு Simon Peter
2. அர்த்தம்: எபிரேயத்தில் சீமோன் - கேட்டல்
அராமிக் - கேபா - கல் / பாறை. இது இயேசு வைத்த பெயர்.
கிரேக்கம் - பேதுரு - பாறை).
3. சிறுகுறிப்பு:
• புனித அந்திரேயாவின் உடன்பிறந்த சகோதரர்
• தந்தை யோனா
• இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) முதற்சீடர்
• கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊர்.
• பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று அறிக்கை செய்தார்.
• புதிய ஏற்பாட்டில் உள்ள 1 பேதுரு, 2 பேதுரு ஆகிய நிருபங்களை எழுதினார்.
• ரோம் நகரில் நீரோவின் காலத்தில், இயேசுவைப் போலவே தான் சிலுவையில் அறையப்படத் தகுதியற்றவர் என்று கருதி, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
4. கற்றுக்கொள்ளும் பாடம்:
உணர்ச்சிவசப்படுபவராகவும், தைரியமானவராகவும் காணப்பட்ட பேதுரு, சில சமயங்களில் மிகுந்த சோதனைகளுக்கும் ஆளானார்.இயேசுவின் பாடுகளின்போது, அவரைத் தனக்குத் தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தார். இருப்பினும், உயிர்த்தெழுந்த இயேசு அவரை மீண்டும் சந்தித்து, தமது ஆடுகளையும் மந்தைகளையும் மேய்க்கும்படி பணித்து, அவருடைய அன்பை உறுதிப்படுத்தினார். பெந்தெகொஸ்தே நாளன்று முதல் மறையுரையை ஆற்றி ஆயிரக்கணக்கானவர்களை விசுவாசத்திற்கு வழிநடத்தினார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
இயேசுவை முதன்முதலில் சந்தித்தல் (யோவான் 1:41-42)
சீஷனாக அழைக்கப்படுதல் (மத்தேயு 4:18-20)
விசுவாச அறிக்கை (மத்தேயு 16:16)
இயேசுவை மறுதலித்தல் (மத்தேயு 26:74-75)
மறுபடி நிலைநிறுத்தப்படுதல் (யோவான் 21:15-17)
பெந்தெகொஸ்தே நாள் பிரசங்கம் (அப்போ 2:14-41)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments