Ad Code

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் World Day Against Child Labour June 12 ஜூன்

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 

குழந்தைத் தொழிலாளர் முறையை உலகளவில் ஒழிக்கவும், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ILO) 2002-ஆம் ஆண்டு முதல் இந்நாள் உருவாக்கப்பட்டது.

குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வி மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் ஆகியவற்றை மீட்டு, அவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுத்தலே இதன் முக்கிய நோக்கமாகும்.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

Post a Comment

0 Comments