சகேயு: ஆவலாய் தேடுவோம்
1. பெயர்: சகேயு Zacchaeus
2. அர்த்தம்:
"தூய்மையானவர்" அல்லது "நீதிமான்" (Pure, Innocent, or Just) என்று பொருள்.
3. சிறுகுறிப்பு:
• இவர் சாதாரண வரிவசூலிப்பவர் (Publican) மட்டுமல்ல, வரிவசூலிப்போருக்குத் தலைவராக (Chief Tax Collector) இருந்தார்.
• இவர் எரிகோ பட்டணத்தில், மிகுந்த ஐசுவரியவானுமாய் இருந்தார்.
• அன்றைக்கு ஆட்சி செய்த உரோமைப் பேரரசுக்கு யூதர்களிடமிருந்தே வரி வசூலித்துக் கொடுத்ததால், சகேயு போன்ற வரிவசூலிப்பவர்கள் சொந்த இன மக்களாலேயே "துரோகிகள்" என்றும் "பாவிகள்" என்றும் ஒதுக்கப்பட்டனர்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க விரும்பினார். ஆனால், குட்டையான மனிதனாய் இருந்ததால், மக்கள் கூட்டத்திற்கு முன்பாக ஓடிச்சென்று, ஒரு காட்டத்தி (சகாமோரா) மரத்தின் மேல் ஏறினார். இயேசு சகேயுவைப் பெயர் சொல்லி அழைத்து அவர் வீட்டுக்குச் சென்றபோது, சகேயு தன் பாவங்களை உணர்ந்து தன் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குத் தருவதாகவும் அநியாயமாய் வாங்கினதை நாலத்தீடாகத் திருப்புவதாகவும் அறிக்கையிட்டார்; இதனால் இயேசு அவனுடைய வீட்டுக்கு இரட்சிப்பு வந்ததாகக் கூறி ஆசீர்வதித்தார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
லூக்கா 19: 1 - 10
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments