"சீடர்" என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் மாதெத்தேஸ் (Mathētēs - μαθητής) என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை "மந்தானோ" (Manthanō) என்ற வினைச்சொல்லிலிருந்து வந்தது. இதற்கு "கற்றுக்கொள்ளுதல்" (to learn) என்று பொருள். எனவே, கிரேக்க மொழியின்படி சீடர் என்றால் "கற்பவர்" அல்லது "மாணவர்" (Learner / Student) என்று அர்த்தம்.

சீடர் என்பவர் ஒரு ஆசிரியரிடம் வெறும் அறிவையோ அல்லது கருத்துக்களையோ மட்டும் கற்றுக்கொள்பவர் அல்ல. சீடர் என்பவர் தன் போதகரின் (ஆசிரியரின்) போதனைகளை ஏற்றுக்கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் அவரைப் பின்பற்றி, அவரைப் போலவே தன் வாழ்க்கையை மாற்றுபவர். இயேசுவைக் கற்றுக்கொண்டு பின்பற்றும் எல்லா விசுவாசிகளுமே சீடர்கள் தான் (Acts 6:1).

சீடர் யார்? 
1. கற்றுக்கொள்பவர்
2. பின்பற்றுபவர்
3. வாழ்ந்து காட்டுபவர்

Prepared by Meyego