அன்னா: பதவியைத் தக்கவைத்து என்ன பயன்?
1. பெயர்: அன்னா (ஆசாரியர்) • Annas
2. அர்த்தம்:
கிருபை உள்ளவர்
3. சிறுகுறிப்பு:
• இவரது மருமகன் அன்னா யூதர்களின் பிரதான ஆசாரியராக கி.பி. 6 முதல் கி.பி. 15 வரை அதிகாரப்பூர்வமாகப் பணியாற்றினார்.
• உரோமை அரசால் பதவியிறக்கப்பட்ட பின்பும், யூத மக்கள் மத்தியில் பெரிய ஆசாரியர் என பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தார்.
• இவரது மருமகன் காய்பா மற்றும் ஐந்து குமாரர்களும் ஆசாரியர்களாக இருந்தார்கள்.
• இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டபோது, முதலாவது அன்னாவின் முன்னிலையில்தான் விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்டார்.
• இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின், பேதுரு மற்றும் யோவானை மிரட்டிய யூத சங்கக் கூட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
அன்னா என்ற பெயருக்கு "கிருபை" என்று அர்த்தம் இருந்தாலும், அவரிடம் உண்மையான தேவ கிருபையோ நீதியோ இருக்கவில்லை. ஆலய வழிபாட்டைத் தன் குடும்பத்தின் சுயநலத்திற்கும், பொருளாதார லாபத்திற்கும், அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் பயன்படுத்தினார். அன்னாவின் வாழ்நாளில் சேர்த்த செல்வமும், அதிகாரமும், ஆலயத்தை வைத்து நடத்திய அநீதியான வணிகமும் கி.பி. 70-இல் ரோமர்களால் எருசலேம் ஆலயம் முற்றிலும் இடித்து அழிக்கப்பட்டபோது சாம்பலாகிப் போனது.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
லூக்கா 3:2 (யோவான் ஸ்நானகன் ஊழியக் காலம்)
யோவான் 18:12-24 (இயேசுவை விசாரித்தல்)
அப்போஸ்தலர் 4:5-12 (அப்போஸ்தலர்களை விசாரித்தல்)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments