பரபாஸ்: பதிலீட்டுப் பலி (Substitution)
1. பெயர்: பரபாஸ் • Barabbas
2. அர்த்தம்:
பிதாவின் குமாரன் (Bar - மகன், Abba - தந்தை/அப்பா)
3. சிறுகுறிப்பு:
• பரபாஸ் என்பவன் யூதேயா தேசத்தில் உரோமை ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்து, அந்தக் கலகத்தில் கொலை பாதகமும் செய்த கொடூரமான குற்றவாளி மற்றும் கொள்ளைக்காரன்
• பஸ்கா பண்டிகை வழக்கப்படி இயேசுவை விடுவிக்க பிலாத்து முயன்றான்; ஆனால், பிரதான ஆசாரியர்களால் தூண்டப்பட்ட மக்கள் பரபாஸை விடுவித்து, இயேசுவைச் சிலுவையில் அறையக் கோரினர்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பரபாஸின் இடத்தில் இயேசு மரணமடைந்தது, மனிதகுலமாகிய நம் ஒவ்வொருவருடைய நிலைக்கும் ஒரு நிழலாட்டமாகும். உண்மையில் பாவிகளாகிய நாம்தான் சிலுவை மரணத்திற்குத் தகுதியானவர்கள் (பரபாஸைப் போல). ஆனால், நம்முடைய பாவங்களையும் ஆக்கினைத் தீர்ப்புகளையும் இயேசு தன் மேல் ஏற்றுக்கொண்டு, நமக்கு விடுதலையைத் தந்துள்ளார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 27: 15 - 26
மாற்கு 15: 6 - 15
லூக்கா 23: 13 - 25
யோவான் 18: 39 - 40
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments