Ad Code

இரத்தசாட்சி • Martys வார்த்தை பயன்பாடு


 சட்ட உலகம்
பண்டைய கிரேக்க நீதிமன்றங்களில் (martys) என்பவன் மிக முக்கியமானவன். ஒரு வழக்கில் ஆவணங்கள் இல்லாதபோது, சாட்சியின் வாய்மொழியே தீர்ப்பை நிர்ணயித்தது. பொய்ச்சாட்சி சொல்வது மரண தண்டனைக்குரிய குற்றம் (உபா 19:16-19). ஆகவே (martureō) என்பது "உயிருக்கு பொறுப்பேற்று உண்மை பேசுதல்".

வணிக உலகம்:
ஒப்பந்தங்களில், உயில்களில் (martys) கையெழுத்திடுவார்கள். "நான் இதை கண்ணால் பார்த்தேன், இது உண்மை" என்று முத்திரை போடுவது.
 
கிறிஸ்தவம்:
முதல் நூற்றாண்டில் (martys) என்ற சொல் "சாட்சி" என்ற அர்த்தத்தில் இருந்து "இரத்த சாட்சி" என்று மாறியது. ஏனெனில் இயேசுவுக்கு சாட்சி சொன்னவர்கள் கொல்லப்பட்டார்கள் (அப் 22:20, வெளி 2:13). அந்திக்கேயாவின் இக்னேசியஸ் கி.பி 110 இல் சொன்னார்: "நான் கடவுளுக்கு (martys) ஆகும்படி மிருகங்களுக்கு இரையாகிறேன்".
ஆகவே (martureō) என்பது "வாயால் சொல்லும் சாட்சி" மட்டுமல்ல, "வாழ்க்கையால், மரணத்தால் கொடுக்கும் சாட்சி".

Post a Comment

0 Comments