பொந்தியு பிலாத்து:
1. பெயர்: பொந்தியு பிலாத்து • Pontius Pilate
2. அர்த்தம்:
பிலாத்து (Pilate) என்றால்"ஈட்டியால் ஆயுதபாணியாக்கப்பட்டவன்" (Armed with a spear).
3. சிறுகுறிப்பு:
• பொந்தியு (Pontius) என்ற ரோமானிய குடும்பப் பின்னணி கொண்டவர்.
• யூதேயா நாட்டின் ஐந்தாவது ரோமானிய ஆளுநராக (Governor) கி.பி. 26 முதல் 36 வரை பதவியில் இருந்தவர்.
• யூதர்களின் மத உணர்வுகளை மதிக்காமல்,எருசலேம் ஆலயப் பணத்தை எடுத்து தண்ணீர் வாய்க்கால் (Aqueduct) கட்டியது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த யூதர்களைத் தடியடி நடத்திக் கொன்றது என கொடூரமான ஆட்சி.
• பிலோ (Philo of Alexandria) என்ற பிலாத்துவின் சமகாலத்து யூத தத்துவஞானி. பிலாத்துவை "மிகவும் பிடிவாதக்காரன், இரக்கமற்றவன், கோபக்காரன்" என்று வர்ணிக்கிறார்
• இயேசு கிறிஸ்துவின் மரண தண்டனைத் தீர்ப்பில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் இவரே.
• கி.பி. 36-ல் சமாரியர்களைக் கொடூரமாகக் கொன்ற குற்றச்சாட்டில் பிலாத்து பதவி நீக்கம் செய்யப்பட்டான்.
• விசாரணைக்காக ரோமாபுரிக்கு அனுப்பப்பட்ட அவனது இறுதி முடிவு என்ன என்பது வரலாற்றில் இன்றும் ஒரு மர்மமாகவே உள்ளது.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசுவிடம் எந்தக் குற்றமும் இல்லை என்று கைகளைக் கழுவித் தன் நிரபராதத் தன்மையைக் காட்ட முயன்றாலும், யூதத் தலைவர்களுக்கும் கூட்டத்தினருக்கும் பயந்து, தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற சுயநலத்தால் இயேசுவை சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்தார். மக்களின் கூட்டத்திற்கும் தன் பதவிக்கும் பயந்து உண்மைக்கு விரோதமாகச் செயல்பட்டார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 27:11-26
லூக்கா 23:1-25
யோவான் 18:28 - 19:16
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments