1. முதலாம் லியோ (கி.பி. 440 – 461)
வரலாற்றில் மாபெரும் என்ற பட்டம் பெற்ற முதல் திருத்தந்தை. கி.பி. 452-இல் ரோம் நகரை நோக்கிப் படையெடுத்து வந்த கொடூரமான மன்னன் அட்டிலாவை நேரில் சந்தித்துப் பேசி, ரோமிற்குள் நுழையாமல் திருப்பி அனுப்பினார்.
2. முதலாம் கிரகோரி (கி.பி. 590 – 604)
எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த ஒரு துறவித் திருத்தந்தை. ரோம் நகரில் பஞ்சம் ஏற்பட்டபோது ஏழைகளுக்குத் தன் சொந்தப் பொறுப்பில் உணவளித்தார். இன்று உலகப் புகழ்பெற்ற கிரகோரியன் இசை இவர் காலத்தில்தான் முறைப்படுத்தப்பட்டது.
3. பன்னிரண்டாம் இன்னசென்ட் (கி.பி. 1691 – 1700)
உறவினர்களுக்குப் பதவி வழங்கும் ஊழல் முறையை முற்றிலும் ஒழித்தவர். திருத்தந்தையின் உறவினர்கள் யாரும் முறையற்ற வகையில் சொத்துக்களையோ பதவிகளையோ பெறக்கூடாது என்று கண்டிப்பான ஆணை பிறப்பித்தார். ஏழைகளைத் தனது உண்மையான உறவினர்கள் என்று அழைத்தார்.
4. பதினான்காம் பெனடிக்ட் (கி.பி. 1740 – 1758)
பேரறிஞர் மற்றும் கலை, அறிவியல், மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தவர். ரோம் நகரில் கலை மற்றும் அறிவியலுக்காக நான்கு கல்விக்கூடங்களைத் தொடங்கினார். சாதாரண ஏழை மக்களோடு தெருக்களில் இறங்கி உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
5. பதிமூன்றாம் லியோ (கி.பி. 1878 – 1903)
தொழிலாளர்களின் திருத்தந்தை என்று அழைக்கப்படுபவர். தொழிற்பuரட்சி நடந்த காலத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பு, நியாயமான ஊதியம் மற்றும் மனித உரிமைகளுக்காக ரேரும் நோவாரம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை வெளியிட்டார்.
6. பதினைந்தாம் பெனடிக்ட் (கி.பி. 1914 – 1922)
அமைதியின் திருத்தந்தை என்று போற்றப்படுபவர். முதல் உலகப் போரின் போது வத்திக்கான் நடுநிலையாக இருக்கும் என்று அறிவித்து, போர்க் கைதிகள் தங்கள் குடும்பங்களுடன் சேரப் பாடுபட்டார். போருக்குப் பின் உலக நாடுகளுக்கு இடையே உண்மையான அமைதி நிலவப் பல சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்.
7. பதினொன்றாம் பயஸ் (கி.பி. 1922 – 1939)
இவர் அறிவியல் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை வத்திக்கானில் அறிமுகப்படுத்தியவர். உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் மார்கோனியின் உதவியுடன் கி.பி. 1931-இல் வத்திக்கான் வானொலியை (Vatican Radio) தொடங்கி, அதன் மூலம் உலக மக்களுக்குத் தனது செய்தியைக் கொண்டு சேர்த்தார். கத்தோலிக்க சமூக செயல்பாடுகளை உலகளவில் வலுப்படுத்தியதோடு, சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.
8. இருபத்திமூன்றாம் யோவான் (கி.பி. 1958 – 1963)
மக்களால் அன்போடு நல்ல திருத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டி, லத்தீன் மொழியில் மட்டுமே நடந்த திருப்பலிகளை மக்கள் தங்களின் சொந்த மொழிகளிலேயே வழிபட வழிவகை செய்தார். இரண்டாம் உலகப் போரின் போது ஆயிரக்கணக்கான யூத அகதிகளைக் காப்பாற்றினார்.
9. இரண்டாம் ஜான் பால் (கி.பி. 1978 – 2005)
நவீன வரலாற்றில் உலகையே மாற்றியமைத்த உலகளாவிய தலைவர். 129 நாடுகளுக்குப் பயணம் செய்து மக்களைச் சந்தித்தார். ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சி அமைதியான முறையில் வீழ்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். தன்னைச் சுட்டுக் கொல்ல முயன்ற மனிதனை நேரில் சந்தித்து மன்னித்தார்.
10. திருத்தந்தை பிரான்சிஸ் (கி.பி. 2013 – 2025)
எளிமை, சுற்றுச்சூழல் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாக விளங்குபவர். ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிய வாழ்க்கை வாழ்பவர். ஏழைகள், அகதிகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பூமிப் பந்தைப் பாதுகாக்க லவ்தாத்தோ சி என்ற சுற்றுச்சூழல் ஆவணத்தை எழுதியுள்ளார்.
இந்தத் திருத்தந்தையர்கள் தங்களின் மதக் கடமைகளைத் தாண்டி, உலக அமைதி, மனித நேயம், மற்றும் எளியோரின் உரிமைகளுக்காக உழைத்ததால் வரலாற்றில் என்றும் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர்.

0 Comments