Ad Code

திபேரியு இராயர் • Tuberius Cesaer • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 36
திபேரியு இராயர்: நிலைப்பது எது?

1. பெயர்: 
திபேரியு இராயர் • Tuberius Cesaer 

2. அர்த்தம்: 
திபேரியு' என்ற பெயருக்கு "திபேர் நதிக்கரையைச் சேர்ந்தவர்" அல்லது "திபேர் நதிக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்" (From the Tiber river) என்று பொருள்.
'இராயர்' (Caesar) என்பது உரோமைப் பேரரசர்களின் பட்டப்பெயர் ஆகும்.

3. சிறுகுறிப்பு: 
• இவர் உரோமைப் பேரரசின் இரண்டாவது பேரரசர் ஆவார். முதலாவது பேரரசரான அகஸ்து இராயருக்குப் பின் கி.பி. 14 முதல் கி.பி. 37 வரை ஆட்சி செய்தார்.
• திருமுழுக்கு யோவான் தனது ஊழியத்தைத் தொடங்கிய காலத்தை லூக்கா எழுதும்போது, இவருடைய ஆட்சி ஆண்டைக் கொண்டே காலத்தைக் கணக்கிட்டுக் குறிப்பிடுகிறார்.
• இயேசு கிறிஸ்துவின் பகிரங்க ஊழியக் காலத்திலும், அவர் சிலுவையில் அறையப்பட்டபோதும் உரோமைப் பேரரசராக இருந்தவர் இவரே.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
திபேரியு இராயர் தன் காலத்தில் உலகையே நடுங்கச் செய்த பேரரசராக, நாணயங்களில் தன் உருவத்தைப் பொறித்து "கடவுளின் மகன்" என்று தன்னை அறிவித்துக் கொண்டவராக வாழ்ந்தார். ஆனால், அவர் ஆண்ட உரோமைப் பேரரசும் அழிந்தது, அவருடைய அதிகாரமும் மறைந்தது. இவ்வுலகில் மனிதர்கள் தரும் பதவியும் அதிகாரமும் தற்காலிகமானவை; மாறாக, இறை ராஜ்யமும் அவருடைய அதிகாரமும் மட்டுமே என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
லூக்கா 3: 1 - 3

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments