கொர்நெலியு: புறஜாதிகளில் முதன்மையானவர்
1. பெயர்: கொர்நெலியு Cornelius
2. அர்த்தம்:
கொம்பு (Horn) அல்லது உறுதியானவன் / பலமுள்ளவன்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 10
ரோம இராணுவ அமைப்பில் நூறு போர்வீரர்களுக்குப் பொறுப்பாளராக (Centurion) இருந்தவர்.
– நீதிமான், கடவுளுக்குப் பயப்படுகிறவர், யூத ஜனங்கள் மத்தியில் நற்சாட்சி பெற்றவர்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• அப்போஸ்தலனாகிய பேதுருவுடன் இணைந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று சுவிசேஷம் அறிவிக்கும் பணியில் ஈடுபட்டார்.
• பேதுரு மூலமாக அவர் செசாரியா (Caesarea) நகரத்தின் முதல் ஆயராக (Bishop) நியமிக்கப்பட்டார் என்று திருச்சபை பாரம்பரியம் கூறுகிறது.
• பிற்காலத்தில் அவர் ஆசியா மைனரிலுள்ள (இன்றைய துருக்கி) 'ஸ்கெப்சிஸ்' (Skepsis) என்ற நகருக்கு சுவிசேஷம் அறிவிக்க அனுப்பப்பட்டார்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
யூதர் அல்லாத புறஜாதிகளுக்கு இரட்சிப்பின் கதவு திறக்கப்பட்டதில் கொர்நெலியுவின் குடும்பமே முதல் சாட்சியாகும். கடவுள் மனிதருடைய வெளிப்படையான பின்புலத்தையோ அல்லது சாதிய/இன அடையாளங்களையோ பார்ப்பதில்லை; தம்மை உண்மையோடு தேடுகிற எவரையும் அவர் புறக்கணிப்பதில்லை. நம்முடைய ஜெபமும் தர்மமுமே தேவ சமுகத்தில் நினைத்தருளப்படும்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments