சீமோன்: ஊழியருக்கு தங்குமிடம்
1. பெயர்: சீமோன் Simon (the tanner)
2. அர்த்தம்:
கேட்பவர்
3. சிறுகுறிப்பு:
• இவர் யோப்பா (Joppa) பட்டணத்தில் கடற்கரையோரமாக வாழ்ந்து, தோல் பதனிடும் தொழில் செய்து வந்த ஒரு விசுவாசி.
• யூதப் பாரம்பரியத்தின்படி, இறந்த விலங்குகளின் தோலைக் கையாளுபவர்கள் தீட்டுள்ளவர்களாகக் கருதப்பட்டனர்.
• அக்கால யூத மிஷ்னா (Mishna) சட்டங்களின்படி, ஒரு நபர் திருமணத்திற்குப் பிறகு தோல் பதனிடும் தொழிலைத் தொடங்கினால், அதை விரும்பாத மனைவி அவரை விவாகரத்து செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு என்ற அளவிற்கு இத்தொழில் அருவருப்பாகப் பார்க்கப்பட்டது.
• ஆனால், அப்போஸ்தலனாகிய பேதுரு யோப்பாவிற்கு வந்தபோது, இந்த சீமோனின் வீட்டில் பல நாட்கள் தங்கியிருந்தார்.
• அப்போஸ்தலனாகிய பேதுரு புறஜாதியாராகிய கொர்நேலியுவின் வீட்டிற்குச் சென்ற பிறகும், சீமோன் யோப்பா பட்டணத்திலேயே தங்கி, அங்குள்ள ஆதி கிறிஸ்தவச் சபைக்குத் தொடர்ந்து ஆதரவாகவும் உபசரிக்கும் மனப்பான்மையோடும் வாழ்ந்தார் என்று ஆதி சபை பாரம்பரியம் கூறுகிறது.
• பெரும்பாலான புனித தலங்கள் தேவாலயங்களாகவோ அல்லது பொது அருங்காட்சியகங்களாகவோ மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க இடம் பல தலைமுறைகளாக ஸகாரியன் (Zakaryan / Zakarjan) என்ற ஆர்மீனியக் கிறிஸ்தவக் குடும்பத்தின் தனியார் உடைமையாக இருந்து வருகிறது.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
யோப்பா துறைமுகப் பகுதியாக இருந்ததால், பிரயாணம் செய்யும் பிற ஆதி திருச்சபை விசுவாசிகளுக்கும் ஊழியர்களுக்கும் இவரது வீடு தொடர்ந்து ஒரு புகலிடமாக இருந்தது. குறிப்பாக, பேதுரு தேவ தரிசனத்தைப் பெற்று, கொர்நேலியு எனும் அந்நிய நாட்டு இராணுவ அதிகாரியின் வீட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இந்த சீமோனின் வீட்டில்தான் தொடங்கியது.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் 9 & 10
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments