எலிமாஸ்: முட்டுக்கட்டையாக இருக்காதே
1. பெயர்: எலிமாஸ் Elymas (Bar-Jesus)
2. அர்த்தம்:
எலிமாஸ்: சூனியக்காரன்அல்லது ஞானி (Sorcerer / Wise man)
பர்யேசு: யேசுவின் மகன்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 13:6-12
• எலிமாஸ் பப்ரொ தீவில் தேவ வசனத்தைக் கேட்ட அதிபதியை விசுவாசத்திலிருந்து தடுக்க முயன்றார்
• இவரைப் பவுல் ஆவியின் வல்லமையால் தற்காலிகமாகக் குருடாக்கினார்; இதைக் கண்ட அதிபதி கர்த்தரை விசுவாசித்தான்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• இவர் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாகவும், மாயவித்தைக்காரனாகவும் (Sorcerer/Magician) இருந்தார்.
• ரோம அதிபதியான செர்கியு பவுலின் அரசவையில் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.
• பவுலின் மூலமாக இறைவன் செய்த அற்புதத்தையும், எலிமாஸுக்கு உண்டான குருட்டுத்தனத்தையும் கண்ட ரோம அதிபதி கர்த்தருடைய உபதேசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு விசுவாசியானான்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இறைவனின் கிரியைகளுக்கும் நற்செய்தி பரவுவதற்கும் தடையாகவும், பிறர் விசுவாசத்தில் வளர்வதைத் தடுக்கும் முட்டுக்கட்டையாகவும் நாம் ஒருபோதும் இருக்கக்கூடாது; கடவுளை எதிர்ப்பவர்களுக்குத் தற்காலிக எழுச்சி இருந்தாலும், இறுதியில் தேவ வல்லமையின் முன் தோல்வியே கிடைக்கும்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments