Ad Code

செர்கியு பவுல் Sergius Paulus Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 80
செர்கியு பவுல்: சத்தியத்தைத் தேடும் மனப்பான்மை

1. பெயர்:  
செர்கியு பவுல் Sergius Paulus

2. அர்த்தம்: 
காவலன் + சிறியவன்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
• அப்போஸ்தலர் 13:6-12: இவர் சீப்புரு (Cyprus) தீவின் பாபோ (Paphos) பட்டணத்தில் ரோமானிய ஆளுநராக (Proconsul) இருந்தார்.
• இவர் விவேகமுள்ள மனிதர்.
• தேவ வசனத்தைக் கேட்க விரும்பிய விவேகியான செர்கியு பவுலை, எலிமா என்ற சூனியக்காரன் தடுக்க முயன்றான்.
• ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அந்தச் சூனியக்காரனைக் குருடாக்கிய அற்புதத்தையும், இறைபோதனையையும் கண்டு செர்கியு பவுல் விசுவாசித்தார்.


4. வரலாற்றுக் குறிப்புகள்
கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிளாதியு சக்கரவர்த்தியின் காலத்தில் சீப்புருவின் ஆளுநராக 'லூசியஸ் செர்கியு பவுல்' (Lucius Sergius Paulus) இருந்தார் என்பதற்கான ரோமானியக் கல்வெட்டுகள் சீப்புருவில் உள்ள சோலோய் (Soloi) பகுதியிலும், பிசீதியா அந்தியோகியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
உலகப் புகழும், அதிகாரமும், உயர்ந்த பதவியும் இருந்தாலும், இறைவார்த்தையைக் கேட்கும் தாழ்மையும் விவேகமும் செர்கியு பவுலிடம் இருந்தது. நமது உலகப்பிரகாரமான தகுதிகள் ஆன்மீகத் தேவையை மறைத்துவிடக் கூடாது.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments