மனாயீன்: உயர் அந்தஸ்தைத் துறத்தல்
1. பெயர்: மனாயீன் Manaen
2. அர்த்தம்:
தேற்றுரையாளி / ஆறுதல் அளிப்பவர்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 13.1 - அப்போஸ்தலனாகிய பவுல் மற்றும் பர்னபா ஆகியோருடன் இணைந்து அந்தியோகியா திருச்சபையில் தீர்க்கதரிசியாகவும் போதகராகவும் ஆவியானவரின் வழிநடத்துதலில் பணியாற்றினார்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• மனாயீன், யோவான் ஸ்நானகனின் சிரச்சேதம் செய்யக் காரணமாயிருந்தவனும், இயேசுவை நியாயந்தீர்த்தவனுமாகிய ஏரோது அந்திப்பா (Herod Antipas) என்பவனுடன் இணைந்து வளர்ந்தவர் (Foster-brother / Childhood companion).
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ஏரோதும் மனாயீனும் ஒரே அரண்மனைச் சூழலில் வளர்ந்தவர்கள். ஏரோது உலகப் புகழையும் பாவத்தையும் தேர்ந்தெடுத்து அழிவைச் சந்தித்தான்; மனாயீனோ கிறிஸ்துவைத் தேர்ந்தெடுத்து தேவ ஊழியரானார். அரச குடும்பத்துச் சூழல், செல்வாக்கு, உலகப் பிரகாரமான வசதிகள் இருந்தபோதிலும், அவர் அரண்மனை வாழ்க்கையின் சுகபோகங்களை விட்டுவிட்டு ஆதித் திருச்சபையில் ஒரு சாதாரண ஊழியராக இணைந்தார். நாம் வளரும் சூழ்நிலையோ அல்லது பின்னணியோ நம்முடைய ஆவிக்குரிய எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை, நாம் கிறிஸ்துவுக்காக எடுக்கும் தீர்மானமே நம்மை உயர்த்துகிறது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments