Ad Code

சீமோன் (மந்திரவாதி) Simon Magus Bible Characters,

திருமறையில் யார் இவர் யாரோ? - 67
சீமோன்: விலைக்கு கிடைக்காத ஆசீர்வாதம் 

1. பெயர்: சீமோன் (மந்திரவாதி) Simon Magus

2. அர்த்தம்: 
கேட்பவர்

3. சிறுகுறிப்பு: 
• சமாரியா பட்டணத்தில் மந்திரவாதம் செய்து, தன்னை ஏதோ ஒரு பெரியவன் என்று சொல்லி, மக்களை பிரமிக்கப்பண்ணியவன்.
• பிலிப்புவின் சுவிசேஷப் பிரசங்கத்தைக் கேட்டு, நடந்த அற்புதங்களைக் கண்டு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றான்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
அப்போஸ்தலராகிய பேதுருவும் யோவானும் கைகளை வைத்து ஜெபித்தபோது ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதைக் கண்டு, அந்த அதிகாரத்தைப் பணம்கொடுத்து விலைக்கு வாங்க முயன்றான்.
பேதுரு அவனைக் கடிந்துகொண்டு, அவன் இருதயம் கடவுளுக்கு முன்பாகச் செம்மையாக இல்லை என்றும், கசப்பான பிச்சிலும் அநீதியின் கட்டிலும் இருக்கிறான் என்றும் கூறி, மனம் திரும்ப எச்சரித்தார்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
அப்போஸ்தலர் 8:9-24

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments